தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி எச்சரிக்கை விடுத்துள்ளளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கட்டுமானக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூராக அமைந்துள்ளது. இதனை முறையாக சேகரித்து அப்புறப்படுத்தும் பணிக்கென மாநகராட்சிக்கு சொந்தமான கீழ்காணும் 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
1) ஸ்டேட்பாங்க் காலனி எஸ்.டி.எ. பள்ளி அருகில் (பின்புறம்)
2) ஸ்டேட்பாங்க் காலனி மேக் கார்டன் (திறவிடம்)
3)ஆதிபராசக்தி பார்க் (திறவிடம்)
4) ரகமத் நகர் ராம் நகர் பார்க் (திறவிடம்)
5) கதிர்வேல் நகர் பகுதிகள் பூங்கா
6) அம்பேத்கார் நகர்
7) ஓம்சாந்தி நகர் பார்க்
8) மார்டினாநகர் பார்க்
9) அய்யாச்சாமி பூங்கா
10) மடத்தூர் ரோடு சந்திப்பு தாழ்வான பகுதிகள்
11) ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் மதுரை பைபாஸ் ரோடு – மீன்வளக் கல்லூரி எதிர்புறம்
12) சுந்தரவேல்புரம் பூங்கா இடம்
13) தருவைக்குளம்
14) புல் தோட்டம்.
15)மாநகராட்சி இடுகாடு வளாகம் வடமேற்கு தாழ்வான பகுதி தமிழ்ச்சாலை (பாளையங்கோட்டை ரோடு)
மேற்கண்ட இடங்களில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டிடக்கழிவுகள் மற்றும் கட்டிட இடிபாடுகள் தொடர்பான பொருட்களை கொட்டுவதற்கு மாநகராட்சியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர்த்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் கட்டுமானம் (ம) கட்டிட இடிபாடுகள் கழிவுகள் மேலாண்மை விதிகளுக்கு முரணாகவும் மேற்படி கழிவுகளை பொது இடங்களில் கொட்டி பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுமென மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.

