தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது தொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்தி: வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை, வாக்குப் பதிவு முடிந்த அரை மணி நேரத்துக்குப் பிறகு தொடங்கலாம். அதன்படி, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 7.30 மணிக்குப் பிறகே வெளியிட வேண்டும்.
வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை தோ்தல் நடைபெறும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக வெளியிட வேண்டும். அதாவது, தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, ஏப்ரல் 4-ஆம் தேதி மாலையுடன் வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு விட வேண்டும்.

