தூத்துக்குடியில் தவெக பகுதி செயலாளர் ஆனந்த் குமார் ஏற்பாட்டில் பல்வேறு வார்டுகளில் விஜய் போன்று சைக்கிளில் சென்று வீதி வீதியாக விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அசத்தினார் தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத் : தவெக நிர்வாகிகள் தொண்டர்கள் செம குஷி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
தூத்துக்குடி, ஏப்ரல், 15



தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் வேட்பாளர்கள் பலர் நூதன பிரச்சாரமாக ஹோட்டல்களில் பரோட்டா போடுதல், வடை, பஜ்ஜி போடுதல், அயனிங் செய்வது என பல்வேறு நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த அடிப்படையில்
தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் நடிகர் ஸ்ரீநாத், வேட்பாளராக அறிவித்து தூத்துக்குடி வருகை தரும் பொழுது முதல் நாளே சுங்கச்சாவடி அருகே ஒரு ஹோட்டலில் மாஸ்டருடன் அமர்ந்து பஜ்ஜி போட்டு தனது பிரச்சாரத்தை நூதன முறையில் துவக்கினார். மேலும் தூத்துக்குடி மாநகரில் பல்வேறு கட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஸ்ரீநாத் தூத்துக்குடி
முத்துநகர் கடற்கரை பூங்கா, போன்றவற்றில் வாக்கிங் செய்து கொண்டு காலையில் வாக்கிங் செல்லும் நபர்களிடமும் வாக்கு சேகரித்தார் மேலும் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் வீதி வீதியாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதுபோல் தூத்துக்குடி முன்னாள் மாமன்ற உறுப்பினரும், தவெக பகுதி செயலாளர் ஆனந்தகுமார் சிறப்பான ஏற்பாட்டில் அவரது தலைமையில் இளைஞர்கள் பைக் பேரணி நடத்தி நேற்று திரவியபுரம், பொன்னகரம், முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணராஜபுரம், பார்வதிஅம்மன் கோவில்தெரு, ஆகியபகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர் ஆனந்தகுமார் இரண்டு சக்கர வாகனத்தில் பின் அமர்ந்து கொண்டு வீதி வீதியாக வாக்கு சேகரித்த வேட்பாளர் ஸ்ரீநாத் சிறிது நேரத்திற்கு பிறகு . விஜய் ஸ்டைலில் பைக்கில் இருந்து இறங்கி சைக்கிளிலும் சென்று விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதனை பார்த்து பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தப் பிரச்சாரத்தின் போது மாவட்ட செயலாளர் எஸ் டி ஆர் சாமுவேல்ராஜ் பகுதி செயலாளர் ஆனந்த் குமார்,பொருளாளர் சரவண்ன், வட்டசெயலாளர் நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
“விஜய்யின் எழுச்சி” மற்றும் கட்சி கொள்கைகளை முன்வைத்து, தூத்துக்குடி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் தனது தேர்தல் பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்து வருகிறார். தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தவெக பகுதி செயலாளர் ஆனந்தகுமார் ஏற்பாட்டில் அவரது தலைமையில் நடைபெற்ற இந்த சைக்கிள் பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பிரச்சாரத்தின் போது அனைத்து வார்டு பகுதிகளிலும் பெண்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து சிறப்பாக வேட்பாளர் ஸ்ரீநாத்தை வரவேற்றனர். பகுதி செயலாளர் ஆனந்தகுமாரின் இந்த சிறப்பான தேர்தல் பிரச்சார ஏற்பாட்டுக்கு தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஸ்ரீநாத் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
