சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து இன்று தேவகோட்டை தனியார் திருமண மஹாலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திசிதம்பரம், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஊழியர் கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் கார்த்திக் சிதம்பரம் பேசுகையில் மத்திய அரசு கொரோனை விட மிக மோசமான அரசு தமிழ்நாட்டில் வருவதை தடுக்க வேண்டும் என்றும், ஏழு வருடங்கள் இந்தியாவை வளர்ச்சி அடைய செய்யாமல்,மோடி அவரின் தாடியை வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் பேசினார், பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசுகையில் ஐநா சபையில் இலங்கை மீது போர் குற்றத்தை இந்தியா ஆதரிக்காமல் வெளியேறியதை தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும், அதிமுகவில் உள்ள ஓபிஎஸ், இபிஎஸ், இருவரும் மத்திய அரசு ஆட்டி வைக்கும் பொம்மை போல் உள்ளதாகவும், பஞ்சாயத்து தலைவராக இருப்பவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைப்போம், இன்னும் கீழ் உள்ள கட்சி தொண்டர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி என்று பேசினார்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


