ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தருவைக்குளம் மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு மற்றும் துறைமுகம் அமைப்பதற்கான
ரூ 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டதையடுத்து மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா. ஆர். ராதா கிருஷ்ணன் அவர்களை
தருவைக்குளம் பங்குத்தந்தை மற்றும் ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளையராஜா. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அனிட்டன் ஆகியோர் தலைமையில் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்து அனைத்து மீனவ சங்கங்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
