2026 தேர்தல் – தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் விஜய்? : மத்திய மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ் டி.ஆர். சாமுவேல் தலைமையில் தவெக வினர் தீர்மானம் நிறைவேற்றம்!
தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மத்திய மாவட்ட சார்பில் செயற்குழுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய மாவட்டசெயலாளர் SDR சாமுவேல்ராஜ் தலைமை வகித்தார் துனைசெயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான கோல்டன்,பொருளாளர் சிவகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக JKRசுபத்ரா முருகன் தேர்தல் கண்காணிப்பாளர் முருகன் இணை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன்,தவெக நிர்வாகிி கிஷோர்,ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், அல்லது பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட வேண்டும் எனதீர்மானம் நிறைவேற்றப்பட்டது மாவட்ட நிர்வாகிகள் பகுதி மற்றும் வார்டு. துணை அமைப்பு நிர்வாகிகள்உள்பட பலர் கலந்து கொண்டனர்.
