தூத்துக்குடி,பிப், 24
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வீடு வீடாக சென்று விசில் சின்னத்தை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளனர். வீடு வீடாக சென்ற தவேகவினர்:
தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை அடுத்து தூத்துக்குடி மாநகரம் 47 வது
வார்டு பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தவெக.கட்சியின் சார்பாக வீடு வீடாக சென்று விசில் சின்னத்தை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில், மத்திய மாவட்ட இணை செயலாளர் எம்.கோல்டன் முன்னிலையில், மாநகராட்சி 47வது வார்டு வட்டச் செயலாளர் ஜெய்ஹர், மற்றும் வார்டு நிர்வாகிகள் ஏற்பாட்டில், அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று விசில் வழங்கி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவுக்கோரினர்
இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.எப். பெர்க்மான்ஸ், ஜே.பி.எஸ்.
செவநர், ராபிஸ்டன், இளைஞரணி இணைச் செயலாளர் ஸ்டீவாக்,
மீனவர் அணி மத்திய மாவட்ட அமைப்பாளர் செல்வம், தொழிலாளர் அணி அமைப்பாளர் பியோ,
தொழிலாளர் முனைவோர் அணி அமைப்பாளர் கெமில்டன், பகுதி செயலாளர்கள் திவாகர், அண்டோ, வர்த்தக அணி அமைப்பாளர் ஜி.சிசில், பகுதி துணை செயலாளர்கள் ஜாய்சன், கிஷோர், ஆகாஷ்,
வட்டச் செயலாளர்கள் அந்தோணிசாமி, ராஜ்குமார், ஜெயஹர், மோச்சையா, அனுசியா, விமல், விஜயன், எடின்பர் பிரதீப், ஜெயின், சுதாகர், விஜய், ராசி, கிளியோபர், ஆகாஷ், எடிசன், மைக்கேல், ஆல்வின், பிரபாகர், ஜெய்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டசபை தேர்தல் 2026 அறிவிப்பு வருவதற்கு முன்பே
தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டு வட்டச் செயலாளர் ஜெய்ஹர், மற்றும் வார்டு நிர்வாகிகள் ஏற்பாட்டில், மிகப் பிரம்மாண்டமாக இளைஞர்கள், மகளிர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாக விசில் அடித்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று தவெக சின்னமான விசில்கள் வழங்கி தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தமிழக வெற்றி கழகத்தினர் துவங்கினர். இதனால் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் கடும் குஷியில் உள்ளனர்.
