ஒட்டப்பிடாரம், நவ,15
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள ஓட்டப்பிடாரம் ஊராட்சி மேலமடம் H.NU.P. மெட்ரிகுலேஷன் பள்ளியில் பூத் எண் 42 ல் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் 04.12.2025 வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்ற இப்பணியில் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சிறப்பு தீவிர திருத்தம் வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவதனை எழிமைபடுத்தும் வகையிலும் இன்று 15.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 16.11.2025 (ஞாயிறுக்கிழமை) ஆகிய இரண்டு தினங்கள் (SIR) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று ஓட்டப்பிடாரம் ஊராட்சி மேளமடம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு திருத்த முகாமில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான இளையராஜா கலந்துகொண்டு பொதுமக்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தொகுதி மக்களிடம் ஒன்றிய செயலாளர் இளையராஜா தெரிவித்ததாவது :
மேற்படி முகாமில் அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் ஐயப்பாடுகளை களைந்திடவும், அதனை நிவர்த்தி செய்வதற்கு சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் தேர்தல் பணி அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். எனவே, மேற்கண்ட (SIR) சிறப்பு முகாமினை வாக்காளர்கள் நன்கு பயன்படுத்தி தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடுமாறு பொது மக்களிடம் தெரிவித்தார். மேலும் இது குறித்து கிராம மக்களுக்கு எந்த ஒரு சந்தேகங்கள் இருந்தாலும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் எந்தெந்த அதிகாரிகள் இப்பணிகளில் ஈடுபட்டுகிறார்கள் என்பது குறித்து தகவல்களை தெரிவிக்கிறேன் எனவும் ஓட்டப்பிடாரம் தொகுதி பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் உதவிடும் வகையில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் நேரில் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை செய்து வருவது பாமர மக்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது எனவும் பொது மக்கள் தெரிவித்தனர். இந்த சிறப்பு முகாம் 16/11/25 நாளையும் நடைபெற உள்ள நிலையில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் , நாளை நடைபெறும் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் ஒன்றிய செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு வீடு தோறும் சென்று விழிப்புணர்வுகள்
ஏற்படுத்தும் வகையில் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிப் பகுதிகளில் உள்ளடங்கிய 38 பூத்களில் ஒன்றிய செயலாளர் இளையராஜா நேரடியாக ஆய்வு செய்து கண்காணிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வின்போது ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வேல்ராஜ், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் டிடிசி ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
இதனால் ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் மற்றும் பாமர மக்கள் ஒன்றிய செயலாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

