தூத்துக்குடி.
தூத்துக்குடியில் நெல்சன் பொன்ராஜ் என்ற தலைமை ஆசிரியர் தனது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 17 பேரை தனது சொந்த செலவில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்று அவர்களது கனவை நிறைவேற்றினார். மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் ஆசிரியர் மற்றும் மாணவர்களை பாராட்டினார்
தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த நெல்சன் பொன்ராஜ் பணிபுரிந்து வருகிறார். நல்லாசிரியர் விருது பெற்ற இவர் சாதாரண ஏழை எளிய மக்கள் பயின்று வரும் இந்த பள்ளியை டிஜிட்டல் மையமாக மாற்றி மாணவர்களுக்கு கணினி கல்வியை கற்றுத் தந்து, மாணவர்களுக்காக பள்ளியில் தனது சொந்த செலவில் பல்வேறு புதிய கட்டிடங்களை கட்டி மாணவர்களுக்கு கல்வியை வழங்கி கல்வியை சேவையாக செய்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து தனது பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் கடந்த் மார்ச் மாதம் 22ஆம் தேதி தனது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என 20 பேரை சென்னைக்கு விமானம் மூலம் அனைத்து சென்று அங்கு பல்வேறு பகுதிகளை காண்பித்து அந்த மாணவர்களின் விமான பயண கனவு மற்றும் சென்னை கனவை நிறைவேற்றினார்
இந்நிலையில் 08.11.2025 அன்று இந்த ஆண்டு இரண்டாவது முறையாக தனது பள்ளியில் படிக்கும் 11 மாணவ மாணவிகள் மற்றும் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆறு பேர் ஒரு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரும் நல்லாசிரியருமான நெல்சன் பொன்ராஜ் மற்றும் ஒருவர் என 20 பேரை அவர்களின் விமானத்தில் பயணம் செய்யும் லட்சிய கனவு மற்றும் சென்னை கனவை நிறைவேற்றும் வகையில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் நல்லாசிரியர் பொன்ராஜ் ஆகியோரை பாராட்டினார். பின்னர் மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில்: விமானத்தில் பயணம் செய்வது அனைவருடைய கனவு. நானே யுபிஎஸ்சி தேர்வில் தேர்வான பின்பு தான் விமானத்தில் பயணம் செய்துள்ளேன் தற்போது உங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ள ஆசிரியரை பாராட்டுகிறேன். இது போன்று நிறைய பேர் இந்த மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றி வருகிறார்கள். வருங்காலங்களில் இது போன்று நிகழ்வுகள் இன்னும் நடைபெற வேண்டுமென அவர் கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து மாணவர்கள் சென்னைக்கு விமானம் மூலம் கிளம்பி சென்றனர். சென்னையில் இறங்கும் அவர்கள் சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகம் அருங்காட்சியகம், தலைமைச் செயலகம், தலைவர்களின் சமாதிகள் ஆகியவற்றை பார்ப்பதுடன், மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணம் மேற்கொள்கின்றனர். பின்னர் மெட்ரோ ரயில் மூலமாக எக்மோர் இரயில் நிலையம் வந்து அங்கிருந்து இரவு முத்து நகர் எக்ஸ்பிரஸ் மூலம் தூத்துக்குடி திரும்புகிறார்கள்.
விமானத்தில் பயணிக்கும் பொழுது இந்த மாணவர்களிடம் எழுத்தாளர் முத்தலாங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூர் அகழாய்வு தாமிரபரணி இதன் சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறுகிறார். மேலும் தாமிரபரணி நாவல் குறித்தும் அறிமுகம் செய்கிறார்.
மாணவர்களின் விமான கனவு மற்றும் சென்னை கனவை நிறைவேற்ற ஆசிரியர் தனி ஒருவர் சுமார் 1.50 லட்சம் செலவு செய்து மாணவர்களை அழைத்துக்கொண்டு சென்று இருப்பது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

