தூத்துக்குடி.
ஓட்டப்பிடாரம் வட்டம் முப்பிலிபட்டி பகுதியில் தனியார் சோலார் நிறுவனம் அரசு புறம்போக்கு நிலங்கள், குளங்கள், ஓடைகள் மற்றும் பொதுப்பாதைகளில் அனுமதி இன்றி மின்கம்பம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து தொடர்ந்து பல்வேறு புகார்களைத் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு அளித்து வருகின்றனர். இந்நிலையில் அக்டோபர் 29 அன்று ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுந்தரலிங்கம் தலைமையில் பொதுமக்கள் மற்றும் நிறுவனப் பிரதிநிதிகள் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மண்டல துணை வட்டாட்சியர் ராதா மகேஷ்வரி, காவல் ஆய்வாளர் பவுல் ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், பலர் கருத்து தெரிவிக்கையில் தனியார் சோலார் நிறுவனம் அனுமதி இன்றி பணிகளை மேற்கொள்வதால் விவசாய நிலங்களும் நீர்நிலைகளும் பாதிக்கப்படுகின்றன என்றும், இதனால் எங்கள் கிராம மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இப்பிரச்சனை குறித்து பல்வேறு புகார்களை காவல்துறை மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவித்தாலும் பலரும் மௌனம் சாதித்து வருகின்றனர் மேலும், தனியார் சோலார் நிறுவனம் விதிமுறைகள் மீறி நீர் நிலைகள் புறம்போக்கு இடங்களில் தொடர்ந்து மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் செய்து வருவதாகவும் மேற்கண்ட பணிகளை உடனடியாக அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இந்நிலை தொடர்ந்தால் கிராம மக்கள் ஒன்று திரண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.
நிறுவனம் சார்பில், தாங்கள் தமிழ்நாடு பசுமை சக்தி நிறுவனம் சார்பாக சட்டப்படி பணிகளை மேற்கொண்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும், இரு தரப்பினருக்குமிடையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
கூட்டம் முடிந்த பின்னரும் சோலார் நிறுவனம் பணிகளைத் தொடரப்போவதாக தெரிவித்தது. இதனால், மக்கள் அதிருப்தியடைந்தனர்.
மேலும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையாவின் சகோதரர் முருகேசன் சோலார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர் அவரின் தலையிட்டால்தான் பல்வேறு அதிகாரிகள் சோலார் நிறுவனத்தின் அத்துமீறல்களை கண்டும் காணாமல் இருந்து வருவதாகவும் கிராமத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். எம் எல் ஏ சகோதரர் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.


ஓட்டப்பிடாரம், முப்புலிவெட்டி, ஒட்டநத்தம், ஓசநூத்து, புதியம்புத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்களின் விவசாய நிலங்களையும் அரசு புறம்போக்கு மேய்ச்சல் நிலங்களை பாலைவனமாக்கும் நோக்கோடு தற்போது சட்டவிரோதமாக தனியார் நிறுவனங்களுக்காக உயரழுத்த மின் பாதையை ஏற்படுத்திட துணையாக இருந்து வருபவர்கள் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா சகோதரர் முருகேசன் மீது பல்வேறு புகார்களை கிராம மக்கள் தெரிவித்திருக்கின்றன.
முப்பிலிவெட்டி கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது இது குறித்து அகிம்சை வழியில் போராட்டம் நடத்தினாலும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தாலும் ஆளுங்கட்சி போர்வையில் அதிகாரிகள் துணையுடன் அடக்குமுறைகள் கையாளப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது ஆளுகின்ற கட்சிக்கு நாங்கள் வாக்களித்திருந்த நிலையில் எங்கள் கிராம மக்களுக்கு இந்த வேதனை தேவையா? எனவும் குரல் எழுப்புகின்றனர்
ஒரு தனியார் சோலார் நிறுவனத்தின் அத்து மீறல்களுக்கும், விதிமுறை மீறல்களுக்கும் உடந்தையாக இருந்து கொண்டு கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் குளங்கள், மேய்ச்சல் நிலங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து மின்கம்பங்கள் வெற்றி வரும் கம்பெனிக்கு ஆதரவாக அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி கிராம மக்களை அடக்கும் முறை செய்வது முப்பிலிவெட்டி கிராமத்தில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதற்கு தக்க பாடங்கள் புகழ்வது என்பது வருகிற தேர்தலில் மக்கள் சக்தி என்ன என்பதை நிரூபிப்போம் என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சோலார் நிறுவனம் நீர்நிலைப் பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்கும் பணியினை தொடர்ந்து செய்து வந்துள்ளனர்
முப்பிலி பட்டி கிராமத்தில் கிராம மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தும், மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று முப்பிலி பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் பொதுமக்கள் வீடு தோறும் கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. அதுபோல புதியம்புத்தூர் ஓட்டப்பிடாரம் சாலையிலும் கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது இதனை அடுத்து ஒன்று திரண்ட கிராம மக்கள் சாலையில் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பொதுமக்கள் கூறுகையில், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா அவருடைய சகோதரர் முருகேசபாண்டியன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமத்திலும் எங்களுடைய முப்பிலிப்பட்டி கிராமத்தில் அதிக மின்சாரம் செல்லக்கூடிய உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சோலார் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரியவருகிறது. ஊர் பொதுமக்கள் விவசாயிகள் சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார். அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மின்கம்பம் நடப்படுகிறது. நாங்கள் அதனை தடுத்து நிறுத்த கோரி பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் சூழ்நிலை உள்ளது. இதற்கு உறுதுணையாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவருடைய சகோதரரும் செயல்படுகிறார். விவசாய நிலம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கிராமம் முழுவதும் கருப்பு கொடி கட்டப்பட்டு கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். அருகில் உள்ள விவசாய நிலத்தை விவசாயம் செய்வதற்கு செல்ல முடியாத சூழ்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதனால் உள்ளே உள்ள இடத்திற்கு விவசாய நிலத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இந்த ஆண்டு அதனால் நாங்கள் விவசாயம் செய்யவில்லை. ஊரில் கோஷ்டி பூசலை உருவாக்கி வருகிறார் எம்எல்ஏ சண்முகையா. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படா விட்டால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முழுவதும் புறக்கணிப்போம். எங்கள் ஊர் முழுவதும் அடையாள அட்டை ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்போம் என்று முப்பிலிபட்டி கிராம மக்கள் ஒன்று கூடி உறுதி மொழி எடுத்துள்ளனர். ஆளுங்கட்சியை சேர்ந்த திமுக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவருடைய சகோதரர் முருகேசன் ஆகிய இருவரும் சேர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் சோலார் மின்விளக்கு அமைப்பதற்கு அரசு நிலம் மற்றும் தனியார் நிலங்களை ஆக்கிரமித்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இன்னும் சில மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள வேளையில் இதுபோல சம்பவங்கள் நடைபெறுவது திமுகவிற்கும் ஆளுங்கட்சிக்கும் கடும் பின்னடைவை ஏற்படும் என்று தெரிய வருகிறது அதுபோல மீண்டும் கிராம மக்கள் ஒன்று கூடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். ஒரு குடும்பம் வாழ்வதற்கு ஒரு ஊரையே அழிக்கும் செயலில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா செயல்பட்டு வருகிறார். ஆகையால் உடனடியாக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் உடனடியாக இதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

