தூத்துக்குடி
முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 41ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளரும், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகரச் செயலாளர் இக்னேஷியஸ், வர்த்தக பிரிவு நேரு, ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், எஸ்.சி.எஸ்.டி முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், விவசாய பிரிவு பேரையா, ஊடகப்பிரிவு சுந்தர்ராஜ், கு.சேகர், அசனார், சுந்தர்ராஜ், ஆசீர் செல்வம், தெர்மல் முத்து மனோகரன், மகிளா காங்கிரஸ், இசக்கியம்மாள், உமா மகேஸ்வரி, ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் சம்சுதீன், வழக்கறிஞர் செல்வம், பிரைன்நாத், செல்வ முருகன், காமராஜ், ஆனந்தராஜ் சேக்ஸ்பியர், தாமஸ், முத்துராஜ், ஏசுதாஸ், அய்யாதுரை, முத்து, ரமேஷ், சாரதி, கிரிதர், பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

