தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் வழிகாட்டுதலின்படியும், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆணையின்படியும், கலெக்டா் மற்றும் இணை இயக்குனர்கள் ஆலோசனையின்படியும், செங்கல்பட்டு மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற போட்டிகள் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மா தலைமையில் செங்கல்பட்டு சி.எஸ்.ஐ. கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளியில் துவக்க விழா தொடங்கி நடைபெற்றது.
விழாவில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும், உதவி திட்ட அலுவலர், நேர்முக உதவியாளர்கள, பள்ளித்துணை ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களும், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பெருமக்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், அமைப்புக்குழு உறுப்பினர்களான நகராட்சி மேல்நிலைப்பள்ளி அஸ்தினாபுரம் தலைமை ஆசிரியர், அஸ்தினாபுரம் பள்ளி மேலாண்மைக் குழுத்ததலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் உள்ளிட்டோர் பங்கு பெற்றனா்.
நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அலுவலர் பெருமக்களுக்கும் நடுவர்களாக பணியாற்றியவர்களுக்கும் நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் தொடக்க விழாவில் அனைவரையும் வரவேற்று, ஒருங்கிணைத்து போட்டிகளை நடத்தினார்..
விழாவில் முதன்மைக்கல்வி அலுவலர் பள்ளிக் கல்வித்துறையின் பல்வேறு நலத்திட்டங்களைக் குறித்தும், வெற்றி பெறும் மாணாக்கர்கள் வெளிநாட்டு கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவர் என்பது குறித்து விளக்கவுரையாற்றினார். அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும், உதவி திட்ட அலுவலர், நேர்முக உதவியாளர் அனைவரும் மாணவர்களுக்கு போட்டிகள் சார்ந்த நல் அறிவுரைகளை வழங்கிப் பாராட்டி வாழ்த்தினர்..
தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய மன்ற பேச்சு, கட்டுரை மற்றும் கதை கூறுதல் , கவிதை எழுதுதல் போட்டியில் 6&7, 8 , 9 வகுப்பு ஆகிய மூன்று வகையிலான போட்டிகளில் 8 வட்டாரங்களில் இருந்து மொத்தம் 192 மாணாக்கர் பங்கு பெற்றனர். போட்டிகளின் நடுவர்களாக தமிழ்க்கவிஞர்களும், எழுத்தாளர்களும், முதுகலை ஆசிரியர்களும் பங்கு பெற்று நடுநிலையான முடிவினை அளித்துள்ளார்கள்.
பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணையின்படி மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி , கதை கூறுதல் கவிதை எழுதுதல் போட்டிகளில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணாக்கர்களுக்கும் பாராட்டுச் சான்றும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச்சான்றும் , பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பயணப்படியும், நடுவர்களுக்கான மதிப்பூதியமும் போட்டி நாளன்றே முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்பட்டது.. அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்றோர் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்…
போட்டிகளில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் , நடுவர்களுக்கும் மதிய உணவு வழங்கி போட்டிகள் நிறைவுபெற்றது.

