• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி  பிரஸ் கிளப் அலுவலகத்தில்   சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது : பத்திரிகையாளர்கள் தொழில் உபகரணங்களை வைத்து பக்தியுடன்  சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

policeseithitv by policeseithitv
October 1, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி   பிரஸ் கிளப் அலுவலகத்தில்    சரஸ்வதி பூஜை  கோலாகலமாக கொண்டாடப்பட்டது :  பத்திரிகையாளர்கள் தொழில் உபகரணங்களை வைத்து பக்தியுடன்   சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி அக் 1

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில்சரஸ்வதி பூஜைகோலாகலமாக கொண்டாடப்பட்டது :இந்துக்களின் முக்கிய பண்டிகையாக நவராத்திரி விழாவும் ஒன்று. நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை-ஆயுத பூஜை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழிலில் வளர்ச்சி அடையவும் கல்விக் கடவுளாம் சரஸ்வதி தேவிக்கு இன்று சிறப்பு பூஜை செய்து நாடு முழுவதும் வழிபடுகின்றனர்.தமிழகத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. தொழில் உபகரணங்கள், ஆயுதங்கள், வாகனங்கள், புத்தகங்கள், இசைக்கருவிகள் என தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்களை கலைவாணி முன்பு வைத்து, மலர்கள், சந்தனம், வஸ்திரம் ஆகியவற்றால் அலங்கரித்து பூஜை செய்து வழிபடுகின்றனர் அதன்படி தூத்துக்குடி மாநகர் பகுதியான தமிழ் சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரஸ் கிளப் அலுவலகம் முழுவதும் அலங்கார வளைவுகள் மாவிலை தோரணங்கள் தொங்கவிடப்பட்டு சரஸ்வதி, விநாயகர், லட்சுமி ஆகிய சுவாமி படங்களுக்கு மாலை அணிவித்து, அவல், பொரி, கடலை, சுண்டல், சர்க்கரை பொங்கல் மற்றும் பழங்கள் படையலிடப்பட்டது. மேலும், இந்த பூஜையில், பத்திரிகையாளர்கள் தங்களது தொழில் உபகரணங்கள் ஆன கேமரா, வீடியோ கேமரா, லோகோ, பேனா, நோட்பேடு உள்ளிட்ட செய்தி சேகரிக்கும் உபகரணங்களை சரஸ்வதி படத்தின் அருகில் வைத்து வைத்து பின்னர் விளக்கேற்றப்பட்டு, ஊதுபத்தி முதலான தூபதீபங்களோடு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.இதில் செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மக்கள் பணி சிறக்கவேண்டுமென, வழிபட்டனர். சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்தால், பிரஸ் கிளப் அலுவலகத்தில் பக்தி மணம் கமழ்ந்தது. சரஸ்வதி பாடல்கள் ஒலிக்க தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் பயபக்தியுடன் வழிபட்டனர். பின்னர் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் சக்கரை பொங்கல், சுண்டல் பழங்கள் உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியை தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முக சுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜி, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஸ்குமார், ஆகியோர் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி பிரஸ் கிளப் கௌரவ ஆலோசகர்கள் அருண், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள், லெட்சுமணன்,கண்ணன், இருதயராஜ், உறுப்பினர்கள், காதர், சித்திக், மாணிக்கம், ஜெயராமன், கருப்பசாமி, மணிகண்டன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

Previous Post

சரஸ்வதி பூஜை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பூஜைக்கான 12 வகையான தொகுப்புகள் அடங்கிய பொருள்களை பிரஸ் கிளப் நிர்வாகிகள் வழங்கினர்.

Next Post

பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Next Post
பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In