• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு தான் அதிமுகவின் தலைமை அலுவலகம்: உடன்குடியில் கனிமொழி எம்.பி ஆவேசம்

policeseithitv by policeseithitv
September 22, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு தான் அதிமுகவின் தலைமை அலுவலகம்: உடன்குடியில் கனிமொழி எம்.பி ஆவேசம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தால் முன்மொழியப்பட்டுள்ள தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் பாலசிங், இளங்கோ, ரமேஷ், நவீன்குமார், சதீஸ்குமார், நகர செயலாளர்கள் சுடலை, முத்து முகமது, பேருராட்சி மன்ற தலைவர் ஹூமைரா ரமீஷ் பாத்திமா அசாப், பேரூர் செயலாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் உடன்குடி பஜார் அண்ணா திடலில் நடைபெற்றது.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்ற உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்
கனிமொழி எம்பி பேசுகையில்: தமிழகத்தை தலை குனிய விட மாட்டோம் என்ற உறுதிமொழியை நாம் எடுத்துள்ளோம். எதற்கு என்றால், கல்விக்கான நிதி உரிமை உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய எதையும் ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் இருக்க கூடிய பெண் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் இவர்களுடைய உரிமை, இவர்களுக்கு வர வேண்டிய நிதி உள்ளிட்டவைகளை பெறுவதற்காக தொடர்ந்து போராடுவோம்.
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம், விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சூளுரை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதைத்தான் ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட அன்று முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், உலக நாடுகளைச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, எந்த நாடுகளோடும் நல்லுறவு வைத்துக் கொள்ள முடியவில்லை. நேபாளம், சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நல்லுறவு இல்லாமல் இருந்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் வெற்றி பெற்ற போது இங்கே கொண்டாடினார்கள். ஆனால் தற்போது, இந்தியாவில் இருந்து செல்லக்கூடிய பொருட்கள் அனைத்திற்கும் 50 சதவீத வரியை விதித்துள்ள காரணத்தால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை கொண்டு வருகிறார். ஆனால், மோடி இதுபோல் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஒன்றிய அரசு நம்மை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறது. இந்த நாட்டை வழிநடத்திக் கொண்டிருப்பது தமிழ்நாடு தான் என்ற பெருமையோடு நாம் இந்த மேடையில் நிற்கிறோம்.
தமிழகத்தில் கலைஞர் வழியில் பல்வேறு திட்டங்கள் பெண்களுக்காக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் மட்டுமின்றி இந்தியாவிலேயே அதிகமான அதிகமான உழைக்கும் பெண்கள் (42சதவீதம்) உள்ள பெருமையை பெற்றிருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான்.
தமிழகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகத்துக்கே எடுத்துக்காட்டாக உள்ளது.
தமிழகத்திற்கு துரோகம் செய்து வரும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. தற்போது அதிமுக அலுவலகத்தையே எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு மாற்றிவிட்டார். அமித்ஷாவின் வீடுதான் அதிமுகவின் அலுவலமாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கக் கூடிய ஒன்றிய அரசு, தமிழர்களின் நாகரீகத்தையும் தொன்மையையும் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தான், கீழடி அகழ்வாராய்ச்சி மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகள் குறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வருகிறது.
தமிழகத்திற்கு பல்வேறு துரோகங்களை தொடர்ந்து செய்து வரும் ஒன்றியத்தில் உள்ள பிஜேபியோடு கைகோர்த்து வலம் வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பகையாக இருக்கக்கூடியவர்கள் யார் என்பதை உணர்ந்து, வரும் தேர்தலில் நாம் விழிப்புணர்ச்சியுடன் வாக்களிக்க வேண்டும்.
தமிழகத்தின் வளர்ச்சி, நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம், தமிழின் பெருமை இதை அத்தனையும் நம்முடைய கைகளில் இருக்கிறது. அந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குகளை நம்மால் நியாயமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்கான உணர்வோடு நாம் செயல்பட வேண்டும். மீண்டும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி தமிழ்நாட்டை தலை நிமிர வைக்கக்கூடிய ஆட்சி மீண்டும் மலரும் என்றுபேசினார்.
பொதுக்கூட்டத்தில், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன்பெரியசாமி, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி, மருத்துவ அணி துணைச்செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணை செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுக பெருமாள், ஜெபதங்கம் பிரேமா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, பிரம்மசக்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் சொர்ணகுமார், முத்துச்செல்வன், இந்திராகாசி, சாகுல்ஹமீது, ஆறுமுகபாண்டியன், ராஜலட்சுமி,
மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், சுரேஷ், வீரபாகு, செல்வபெருமாள், செல்வகுமார், ரகுராமன், சாரதா பொன்இசக்கி, தயாநிதி பாண்டியன், ராமசாமி, ரெங்கநாதன் என்ற சுகு பேரின்ப ராஜ் லாசரஸ், ரவி என்ற பொண்பாண்டி, ஆனந்த், சுரேஷ்குமார், அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், அந்தோணி தனுஷ்பாலன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், இளையராஜா, சரவணக்குமார், ராமசாமி, சுரேஷ்காந்தி, கொம்பையா, ரவி, ஜோசப், பார்த்திபன், கோட்டாளம், கொம்பையா, துணைச்செயலாளர்கள் கணேசன், ஹரிபாலகிருஷ்ணன், நாராயணன், பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர், பேரூர் செயலாளர்கள் இளங்கோ, ராயப்பன், சுப்புராஜ், நவநீத முத்துக்குமார், கண்ணன், கோபிநாத், ராமஜெயம், முத்துவீரபெருமாள், ஜமீன்சாலமோன், மால்ராஜேஷ், முருகானந்தம், நவநீதபாண்டியன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாவட்ட பிரதிநிதி பூபேஸ்நாதன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் நாராயணன், ஹரிபாலகிருஷ்ணன், சண்முகராஜ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் பொன்னரசு, மற்றும் கபடி கந்தன், வக்கீல் கிருபாகரன், பாரதிராஜா, கப்பிகுளம் பாபு மற்றும் பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொருளாளர் ராமநாதன் நன்றியுரையாற்றினார்.

Previous Post

கல்வியும் பொதுஅறிவையும் வளர்த்து கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம் தூத்துக்குடி கல்லூாி விழாவில் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

Next Post

ஸ்ரீசித்தர் பீடத்தில் காலபைரவர் சிறப்பு மஹா யாக வழிபாடு “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலம்.

Next Post
ஸ்ரீசித்தர் பீடத்தில் காலபைரவர் சிறப்பு மஹா யாக வழிபாடு  “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலம்.

ஸ்ரீசித்தர் பீடத்தில் காலபைரவர் சிறப்பு மஹா யாக வழிபாடு "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In