தூத்துக்குடி
இஸ்லாமிய மாதங்களில் ரபீஉல் அவ்வல் மாதம் மூன்றாவது மாதமாகும், இந்த மாதத்தின் 12ம் நாள் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளாகும். முகமது நபிகள் பிறந்ததை நினைவுகூரும் வகையில் வாழ்க்கையைப் போற்றியும், அவர்களின் போதனைகளை நினைவு கூர்ந்தும் இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.
அதனடிப்படையில் தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபை மற்றும் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் முத்தையாபுரம் சார்பில் மக்தப் மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாநகர ஜமாத் உலமா சபை தலைவர் இம்தாதுல்லாஹ், மாவட்ட தலைவர் ஷேக் முஹம்மது, செயலாளர் சம்சுதீன், முத்தையாபுரம் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் செய்யது மரைக்காயர், செயலாளர் முஹம்மது, பொருளாளர் அப்துல் மஜித், துணை செயலாளர் சம்சுகனி, நிர்வாககுழு உறுப்பினர் செய்யது சிராஜுதீன் , அப்பாஸ், கமால்தீன், சிக்கந்தர், சம்ஜத் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

