தூத்துக்குடி மாநகர பகுதி 40 வது வார்டு அதிமுக சார்பில் ஜெ.77 வது பிறந்தநாள் முன்னிட்டு மெகா நலத்திட்ட உதவிகள் : எட்வின் பாண்டியன் தலைமையில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி,செப்,13
தூத்துக்குடி மாநகர பகுதி 40 வது வார்டு அதிமுக சார்பில் ஜெ.77 வது பிறந்தநாள் முன்னிட்டு மெகா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாமன்ற உறுப்பினர் எட்வின் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியாரின் வழிகாட்டுதலின் படி ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.முன்னாள் மாவட்ட நுகர்வோர் மொத்த பண்டகசாலை தலைவர் முன்னாள் பகுதி கழக செயலாளர், மாமன்ற உறுப்பினர் எட்வின் பாண்டியன் ஏற்பாட்டில் அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த செல்லப்பாண்டியன் சன் பீட்டர் கோவில் தெருவில் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் தையல் இயந்திரம், மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்,முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க செயலாளர் மாமன்ற உறுப்பினர் அகஸ்டின்,முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மற்ற துணை செயலாளர், மாமன்ற உறுப்பினர் சகாயராஜ், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப்,முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம்,முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் ஞாயம் ரொமால்ட்,மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன்,முன்னாள் எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் தெர்மல் முருகேசன்,முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவ சுப்பிரமணியன்,மாவட்ட பிரதிநிதி ஜேடியம்மா,வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுண் சகாயராஜ், அந்தோனி ராஜ்,முன்னாள் வட்ட செயலாளர்கள்,அந்தோனி செல்வராஜ்,அசோகன்வெலிங்டன், பிஎம்எஸ் செல்வராஜ், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்,டெரன்ஸ்,சங்கர்,சகாயராஜ்,பேச்சியப்பன்,சிறுபான்மை பிரிவு,அனிஸ்டஸ்,பிரபாகரன் அபுதாஹிர், வட்ட பிரதிநிதிகள் சுப்புராஜ்,சேவியர்,தருவை ராஜா,ரெக்ஸி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

