திருச்செந்தூரில் நடைபெற்ற கலைஞர் 102 வது பிறந்த நாள்விழா கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற
கனிமொழி கருணாநிதி எம்.பி,
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு
ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா யானை நினைவு பரிசாக வழங்கினார்.
===================
தூத்துக்குடி, செப், 4




முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நலத்திட்டம் வழங்குதல் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் போன்ற வகையில் எழுச்சியுடன் கடைபிடிக்க வேண்டுமென தி.மு.க தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
அதன் நிறைவாக திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 200 அணிகள் பங்கேற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா 03.09.2025 அன்று மாலை 4.30 மணிக்கு தண்டுபத்தில் உள்ள பசுங்கிளி அம்மாள் – ராமமூர்த்தி அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற 10 அணிகளுக்கு கோப்பை மற்றும் முதல் பரிசாக ரூ.1,00,000 இரண்டாம் பரிசாக ரூ.80,000 மூன்றாம் பரிசாக ரூ.70,000 நான்காம் பரிசாக ரூ.50,000 ஐந்தாம் பரிசு ரூ.40,000 ஆறாம் பரிசு ரூ.30,000 ஏழாம் பரிசு ரூ.25,000 எட்டாம் பரிசு ரூ.20,000, ஒன்பதாம் பரிசு ரூ.15,000 பத்தாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படவுள்ளது.
மேலும் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த ஆல்ரவுண்டர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. அதேபோல் போட்டியில் பங்கேற்ற அனைத்து கிரிக்கெட் அணிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அமைச்சர் அனிதா
ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி பங்கேற்று பரிசு, கோப்பை மற்றும் கிரிக்கெட் விளையாட்டு அணிகளுக்கு உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் திருச்செந்தூர் தொகுதி கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னணியினர், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு விரும்பிகள் பெருமளவில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அ. இளையராஜா தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு திருச்செந்தூரின் சிறப்பாக யானை நினைவு பரிசாக வழங்கினார். பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில்
ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அ. இளையராஜா நாள்தோறும் தவறாமல் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று சிறப்பித்தார். என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் செயல்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.
செய்தி தொகுப்பு கிங் கண்ணன்

