தூத்துக்குடியில்
காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :
ஆணவ படுகொலை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என
ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், பெருமாள் சாமி பேச்சு!!!
தூத்துக்குடி,
ஆகஸ்ட், 6.
தூத்துக்குடியில்
காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஆகஸ்ட் 6 ம் தேதி இன்று மாலை விவிடி சிக்னல் அருகே வைத்து
நடைபெற்றது.
நெல்லை மாவட்டம்
பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆணவ படுகொலை போன்ற சம்பவங்களை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். எனவும்
தமிழக முதல்வர் இந்த ஆணவ படுகொலையை தடுக்கும் வகையில் சிறப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எஸ்.சி, எஸ்.டி மாவட்ட தலைவர் ராஜாராம்
தலைமை வகித்தார்.
அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர்
ஜெயக்கொடி
முன்னிலை வகித்தார். தங்கராஜ் (தெற்கு மண்டல தலைவர் இக்னேஷியஸ் (மாநகர காங்கிரஸ் பொது செயலாளர்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில்
கவன ஈர்ப்பு உரையை
பெருமாள் சாமி (தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்) ஆற்றினார். தமிழக அரசு உடனடியாக ஆணவ படுகொலை இனி நடைபெறாமல் தடுக்க அவசர சட்டம் கொண்டுவர வேண்டுமென தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில எஸ்.டி பிரிவு செயலாளர் முனியசாமி நன்றியுரை நிகழ்த்தினார். இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை சார்ந்த மாவட்ட, மாநில நிர்வாகிகள், பெண்கள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

