தூத்துக்குடி,
ஜூலை, 31
அரசுத்துறை சேவை திட்டங்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்
நடைபெற்று வருகிறது
ஸ்டாலின் என்னும் சிறப்பு முகாம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வருவாய்த்துறை, ஊராட்சித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, மின்வாரியத்துதுறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறை அடங்கிய முகாம் அமைக்கப்பட்டு பட்டாவில் பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், குடிநீர் இணைப்பு, தொழில் வரி விதிப்பு, மின் இணைப்பு, ஆதார் அட்டை திருத்தம், முதியோர் உதவித்தொகை, தெருவோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, இலவச பட்டா மனை வழங்குதல் உள்ளிட்டவை சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதி தூத்துக்குடி மாவட்டம்
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்தம்மாள் காலனி அருகே உள்ள அய்யாசாமி காலணியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுக்கு ஆணைகளை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினாா்.



தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 2 மற்றும் 14 வார்டு மக்களுக்கான ஸ்டாலின் திட்ட முகாம் அய்யாசாமி காலணி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 13 துறையின் கீழ் 43 வகையான பயன்பாடுகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நடைபெற்றது.
முகாமில் சண்முகையா எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தாா். பொதுமக்கள் ஒவ்வொரு நபர்களிடமும் குறைகளைக் கேட்டிருந்தார் . பின்னர் அங்குள்ள அதிகாரிகளுக்கு மேற்கண்ட மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். பின்னர் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகள் வழங்கப்பட்டது.
மாநகராட்சி பணிக்குழு கீதாமுருகேசன், தாசில்தாக்கள் முரளிதரன், முருகேஸ்வரி, மாநகராட்சி நிகழ்ச்சியில் தலைவர் உதவி ஆணையர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் முனீஸ், இளநிலை பொறியாளர் ராஜேஷ் கண்ணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், கிராமநிர்வாக அலுவலர்கள் சுரேஷ்குமார், மீனாட்சி பிரேமலதா, திருவரங்க செல்வி, ராஜலட்சுமி, உதவியாளர்கள் குமாரலிங்கம், சின்னத்தாய், ஹசினாசுஜிதாபானு, திமுக பகுதி செயலாளர் சிவகுமார், மாவட்ட பிரதிநிதிகள் பூவேஸ்நாதன், தர்மராஜ், மகளிரணி அமைப்பாளர் பௌசியா, வட்ட செயலாளர் கார்த்திக், தொமுச முத்துராஜ், பகுத்தறிவு கழக பேரவை முருகேசன், மற்றும் கப்பிகுளம் பாபு, பொன்ராஜ், முருகேசன், அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

