தூத்துக்குடி, ஜூலை, 13
தூத்துக்குடி இஞ்ஞாசியார் ஆர்.சி தொடக்கப்பள்ளி, வளாகத்தில் இன்று 13/07/25 ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாபெரும் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது. கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் மாபெரும் தூத்துக்குடி நலக்குடில் இணைந்து நடத்திய இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாமை
அருட் பணியாளர் பெஞ்சமின் டிசூசா ஜெபம் செய்து துவக்கி வைத்தார்.






கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் தலைவர் தங்கையா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை நலப் பிரிவு மாவட்டத் தலைவர் ராஜா ஸ்டாலின், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் இஞ்ஞாசியார்புரம் தூத்துக்குடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். இதில் வாத நோய், சர்க்கரை நோய், தோல் வியாதி, உயர் இரத்த அழுத்தம், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பஞ்சர் சிகிச்சை, மலர் மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், பிசியோ தரபி மருத்துவம், அரோமா சிகிச்சை வர்ம சிகிச்சை, விதை சிகிச்சை, உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்பில் பல்வேறு நோய்களுக்கு ஆலோசனைகள் மற்றும் பரிசோதனை செய்யப்பட்டது.இந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட்டது. இந்த மாபெரும் இயற்கை மருத்துவ சிறப்பு முகாமில்
இயற்கை மருத்துவம் ஹீலர் ஜெகன், ஹோமியோபதி மருத்துவர் திருமதி டாக்டர் ஆதித்யா, பிசியோதரபி மருத்துவம் டாக்டர் மைக்கேல் ஜான் ஜெயகர் ஆகியோர் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். இந்த மாபெரும் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாமில்
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என சுமார் நூற்றுக்கணக்கானோர் மருத்துவ முகாமில் பங்கேற்று பல்வேறு
பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பெற்றனர்.

