• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியனை நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
July 8, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியனை நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.
பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 15.07.2025 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பள்ளிச்சீருடைகள், ஸ்கூல் பேக் ஆகியவை தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சி, காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள பால்கனி நாடார் தோட்டத்தில் வைத்து வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அறுசுவை அசைவ விருந்து மெகா அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், சமுதாய சொந்தங்கள், ஊர்பெரியவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் ஏ.லெட்சுமணன், மாநில பொருளாளர் எம்.எஸ்.டி.ரவிசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பல்வேறு தலைவர்களை நேரில் சந்தித்து காமராஜர் பிறந்த நாள் விழா அழைப்பிதழை வழங்கி வருகிறார்கள்.


அதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியனை அவரது கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழாவிற்கு வருகை தருமாறு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் நாடார் அழைப்பிதழ் வழங்கினார். இதில் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளரும், முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க செயலாளரும், அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினருமான அகஸ்டின், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க மாநில துணைத்தலைவர் தருவைக்குளம் சண்முகவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.
கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் 123-வது அவதார தின விழாவை தூத்துக்குடியில் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் வெகு சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் அதன் நிறுவனத்தலைவர் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில் தூத்துக்குடியில் மெகா நலத்திட்ட உதவிகள், மெகா அன்னதானம், பள்ளி மாணவர்களுக்கு நோட்புத்தகம் வழங்குதல் உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்களை சிறப்பாக செய்ய முன்னேற்பாடு பணிகள் மின்னல் வேகத்தில் செய்து வருகிறார்.

Previous Post

முடி திருத்தும் தொழிலாளர்கள் மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் – சுமார் 500 பேர் திரண்டனர்.

Next Post

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தல்: நிபுணர் குழு பரிந்துரையை சுட்டிக்காட்டி ஆட்சியரிடம் தொழில் அமைப்புகள் கோரிக்கை!

Next Post
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தல்:  நிபுணர் குழு பரிந்துரையை சுட்டிக்காட்டி   ஆட்சியரிடம் தொழில் அமைப்புகள் கோரிக்கை!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தல்: நிபுணர் குழு பரிந்துரையை சுட்டிக்காட்டி ஆட்சியரிடம் தொழில் அமைப்புகள் கோரிக்கை!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In