• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குலையன்கரிசலில் காமராஜர் முழு உருவ வெண்கல சிலை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். அமைச்சர், எம்எல்ஏக்கள், மேயர் பங்கேற்பு

policeseithitv by policeseithitv
June 28, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குலையன்கரிசலில் காமராஜர் முழு உருவ வெண்கல சிலை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.  அமைச்சர், எம்எல்ஏக்கள், மேயர் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி.

தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா குலையன்கரிசலில் நடைபெற்றது. விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் வெள்ளக்கண் தலைமை வகித்தார். விபிஆர் சுரேஷ், மங்களபாண்டியன், ரமேஷ் விஜயகுமார், தனசேகர், தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார காங்கிரஸ் செயலாளர் ராமஜெயம் வரவேற்புரையாற்றினார்.

குத்துவிளக்கு ஏற்றி வைத்து காமராஜர் சிலையை திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி திறந்து வைத்து ஆளுயுர ரோஜாப்பூ மாலை அணிவித்தார்.

விழாவில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் மீனவர்நலன் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்தனர்.

சண்முகையா எம்எல்ஏ பேசுகையில்: கல்வித்தந்தை காமராஜர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏழை, எளிய மக்களுக்காக குரல் கொடுத்து தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றி எல்லோர் வாழ்விலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று உழைத்தார். இந்தியாவின் பல பிரதமர்களை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தவர். கல்வியில் புரட்சியை ஏற்படுத்தி தமிழகத்தில் உள்ள விவசாயிகள் நலனை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அணைகள் கட்டி கொடுத்ததன் காரணமாக இன்று நாம் பல நற்பலன்களை அனுபவித்து வருகிறோம் என்று பேசினார்.

ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ பேசுகையில்: காமராஜர் வாழ்ந்த காலம் பொற்காலம். ஒவ்வொருவரும் அவருடைய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். எதற்காக என்றால், எல்லோரையும் மதிக்கும் பண்பு, எளிய முறையில் பழகும் நட்பு, நமக்காக வாழ்ந்த தலைவர் ஒருவர் தமிழகத்திற்கு மட்டும் முதலமைச்சராக இருந்து பணியாற்றவில்லை. இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக திகழ்ந்து வாழ்ந்து மறைந்த தலைவருக்குத் தான் இன்று நாம் விழா எடுத்திருக்கிறோம். இவரது பல பண்புகளையும் நாம் பின்பற்றி எதிர்வரும் காலங்களில் சமுதாய முன்னேற்றத்திற்காக இன்றைய இளைஞர்கள் பணியாற்ற வேண்டும். அவர் காலத்தில் நாம் வாழவில்லை என்றாலும், அவரின் பெருமைகளை எடுத்துக் கூறும் பாக்கியம் கிடைத்தது மிகப்பெரிய வரபிரசாதமாகும் என்று பேசினார்.

விழாவில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரி சங்கர், திமுக ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், இளையராஜா, பகுதி செயலாளர் ஆஸ்கர், தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், மாவட்ட சிறுபாண்மை அணி தலைவர் ராஜா ஸ்டாலின், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பால்ராஜ், அகில இந்திய கராத்தே செல்வின் நாடார் நற்பணி மன்ற தலைவர் ராஜ் நாடார், அகில இந்திய நாடார் கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் அந்தோணி நாடார், விவசாய சங்க தலைவர் ஜெகன், நாடார் சங்க நிர்வாகிகள் செல்லையா நாடார், சைமன், ஜெயக்குமார், சுதந்திரராஜ், சுபாஷ், செல்லத்துரை, பர்னாபாஸ் செல்லத்துரை, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் குணதுரை, செல்வராஜ், காங்கிரஸ் செயலாளர் ஜெயதுரை, வட்டார செயலாளர் வசந்தகுமார், பொருளாளர் ஜெயம், வட்டார தலைவர் அபிஷேக், கவுன்சிலர் விஜயகுமார், யோகவேல், சக்திவேல் முருகன், உள்பட திமுக, காங்கிரஸ் மற்றும் பல்வேறு நாடார் சங்க நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

திமுக ஒன்றிய செயலாளர் ஜெயகொடி நன்றியுரையாற்றினார்.

Previous Post

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கொள்கையோடு ஜூலை 7ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப் பயணம்

Next Post

திமுக ஆட்சியின் சாதனைகள் என்னவென்றால் 4 ஆண்டுகளில் 25 லாக்கப் டெத் நடந்தது தான் சாதனை!! முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த அஜித் குமார் மரணத்திற்கு சிபிஐ மூலம் நீதி கிடைக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!!

Next Post
திமுக ஆட்சியின் சாதனைகள் என்னவென்றால் 4 ஆண்டுகளில் 25 லாக்கப் டெத் நடந்தது தான் சாதனை!! முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த அஜித் குமார் மரணத்திற்கு சிபிஐ மூலம் நீதி கிடைக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!!

திமுக ஆட்சியின் சாதனைகள் என்னவென்றால் 4 ஆண்டுகளில் 25 லாக்கப் டெத் நடந்தது தான் சாதனை!! முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த அஜித் குமார் மரணத்திற்கு சிபிஐ மூலம் நீதி கிடைக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In