தூத்துக்குடி ஜூன் 23
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் முன்னிட்டு அதன் பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் ஆலோசனையின் பெயரில் தமிழகம் முழுவதும் மிகப் பிறந்த நாள் முன்னிட்டு நலத்திட்டம் வழங்குதல் ஏழை எளிய மக்களுக்கு உதவுதல் போன்ற
பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதுபோல்
தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று 22-06-25 விஜய் 51வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மத்தி மாவட்ட செயலாளர்
எஸ்டிஆர் சாமுவேல்ராஜ் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலை மாரத்தான் போட்டி நடைபெற்றது இதில் 350 பேர்கலந்து கொண்டனர்.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை
தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கப்பட்டது. பின்னர் பழையபேரூந்து நிலையம் அருகே பட்டாசுவெடித்து பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.பின்னர் சிவன்கோவிலில் விஜய் பெயரில் சிறப்பு பூஜையும் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆனந்த மஹாலில் நடைபெற்ற இரத்ததான முகாமை துவக்கி வைத்து 251பேர் இரத்ததானம் வழங்கப்பட்ட நிலை அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
வல்ல நாடு செய்துங்கநல்லூர் தாளமுத்துநகர் ஆகிய பகுதிகளில் சிறப்புபூஜையும் இனிப்பும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதியம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து 1051பேருக்கு அறுசுவை அசைவ விருந்து வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து
இரவு 7மணிக்கு தூத்துக்குடி விவிடி
சிக்னல் அருகே நடைபெற்ற மெகா நலத்திட்ட விழாவில் தையல் இயந்திரம் இலவச அரிசி, சேலை,
மாற்றுதிறனாளிக்கு நாற்காலி, போன்ற ஏராளமான நலத்திட்டங்களை மத்திய மாவட்ட செயலாளர் எஸ்டிஆர் சாமுவேல்ராஜ் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட்செல்வன் சிறப்பு விருந்தினராக வருகை தந்து விழா பேருரை ஆற்றி நலத்திட்டங்களை வழங்கினார்.
2551 பேருக்கு சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட இந்த மெகா நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி திராவிடக் கட்சிகள் சேர்ந்த நிர்வாகிகள் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அந்த அளவிற்கு மிக பிரம்மாண்டமாக தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் மேடைகள் அமைத்து நலத்திட்டங்கள் வழங்கி அசத்தினர்.இந்த நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபர் சாம் கிஷோர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் இனைசெயலாளர்கோல்டன் பொருளாளர் சிவகுமார் துனைசெயலாளர் மரியா செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார் ஜோஜப் ஆனந்த் மகேஷ்குமார் சுரேஷ்குமார் ஷுடி சித்திரா காயத்திரி தருவைக்குளம் வழக்கறிஞர் கிங்ஸ்டன், தவெக மத்திய மாவட்ட அலுவலக மேலாளர் கனகவேல், சார்மிலி விஜய் சுபாகர் பிரான்சிஸ் ஞானபுஸ்பம் மற்றும்மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய மற்றும் கிளைகழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

டாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மத்தி மாவட்ட செயலாளர்
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை

பின்னர் சிவன்கோவிலில் விஜய் பெயரில் சிறப்பு பூஜையும் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆனந்த மஹாலில் நடைபெற்ற இரத்ததான முகாமை துவக்கி வைத்து 251பேர் இரத்ததானம் வழங்கப்பட்ட நிலை அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
இந்த நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபர் சாம் கிஷோர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் இனைசெயலாளர்கோல்டன் பொருளாளர் சிவகுமார் துனைசெயலாளர் மரியா செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார் ஜோஜப் ஆனந்த் மகேஷ்குமார் சுரேஷ்குமார் ஷுடி சித்திரா காயத்திரி தருவைக்குளம் வழக்கறிஞர் கிங்ஸ்டன், தவெக மத்திய மாவட்ட அலுவலக மேலாளர் கனகவேல், சார்மிலி விஜய் சுபாகர் பிரான்சிஸ் ஞானபுஸ்பம் மற்றும்மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய மற்றும் கிளைகழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.