மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனர் கார்த்திக் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கார்த்திக் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கார்த்திக் விரைவில் குணமாகி வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.


