திருநெல்வேலி,
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க நெல்லை மாநகர திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பாளையங்கோட்டை, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் தச்சநல்லூரில் உள்ள ஜி.வி மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், பாளையங்கோட்டை அன்டன் செல்லத்துரை, மாநகர துணை செயலாளர் அப்துல் கையூம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அலிப்மீரான், இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை பேட்டை பகுதி செயலாளர் நமச்சிவாயம் கோபி வரவேற்றார்.
திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்குட்பட்ட பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் முத்துசெல்வி ஆகியோர் கலந்து கொண்டனா்.
மாநகர, பகுதி, வட்ட நிர்வாகிகள், மாநகர சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வர்த்தக அணி தலைவர் அவதார் ஷாஜகான் நன்றியுரை கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாநகர செயலாளர் சுப்பிரமணியம் செய்திருந்தார்.

