தூத்துக்குடி, அக்,8
தூத்துக்குடி பிரஸ் கிளப்பிற்கு புதிய நிர்வாகிகள் கடந்த மாதம் 11ம் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோரை மரியாதை நிமித்தமாக ஏற்கனவே சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், நெல்லை சரக டிஐஜி மூர்த்தி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோரை மரியாதை நிமித்தமாக இன்று தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதில் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார், மன்ற கௌரவ ஆலோசகரும், மூத்த பத்திரிகையாளருமான ஆத்திமுத்து, பாலகிருஷ்ணன் செயற்குழு உறுப்பினர்கள் தீக்கதிர் குமார், முத்துராமன், கண்ணன்,
மாரி ராஜா, செந்தில் முருகன், இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

