இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு மற்றும் தூத்துக்குடி வ உ சி துறைமுகம் ஆகியவை இணைந்து கனரக வாகன ஓட்டுனர்களுக்கான கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி துறைமுகம் சாலையில் உள்ள கனரக வாகன பாஸ் வழங்கும் மையத்தில் வைத்து நடைபெற்ற இம்முகாமில், கனரக வாகன
ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் ஏ.எல் சரவணன் ஏற்பாட்டின் பெயரில், தூத்துக்குடி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.. தூத்துக்குடி துறைமுக போக்குவரத்து அதிகாரிகள் விஜய ராஜேந்திரன் மற்றும் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
இம்முகாமில், தி ஐ பவுண்டேஷன் மற்றும் அருணா கார்டியோ கேர் நிறுவன மருத்துவர்கள் கலந்து கொண்டு ஓட்டுநர்களுக்கு பரிசோதனைகள் செய்தனர்.. இதில், ஏராளமான கனரக வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்களையும் தங்கள் உடலையும் பரிசோதனை செய்தனர். மேலும், ஐந்து நபர்களுக்கு கண்ணாடி வழங்குவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், இந்திய கனரக வாகன ஓட்டுனர் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் ஜான்சன், மாவட்டச் செயலாளர்கள் சென்றாய பெருமாள், சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

