தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மத்திய ஓன்றிய திமுக பொதுஉறுப்பினா்கள் கூட்டம் புதுக்கோட்டை ஆர்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அவைத்தலைவர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். ஓன்றிய துணைச்செயலாளர்கள் ஹாிபாலகிருஷ்ணன், ராஜ்குமாா், ஏஞ்சலின் ஜெனிட்டா, பொருளாளர் ரமேஷ் விஜயகுமாா், மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன், வெயில்ராஜ், செல்வின், ஆகியோர் முன்னிலை வகித்தனா். ஓன்றிய செயலாளர் ஜெயக்கொடி வரவேற்புரையாற்றினார்.
சண்முகையா எம்.எல்.ஏ பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி தமிழக முதலமைச்சர் ஆட்சியில் தமிழர்கள் நலன், மாநில வளர்ச்சி உள்ளிட்ட அத்தனை திட்டங்களையும் எல்லா துறைகளிலும் நிறைவேற்றுவதால் இந்தியாவில் நம்பர் ஓன் மாநிலமாகவும் நம்பர் ஓன் முதலமைச்சருமாகவும் தளபதியார் விளங்குகிறார். கழக வளர்ச்சி பணிதான் எல்ேலாருக்கும் முக்கியம் முதலமைச்சாின் சாதனைகளை ஓவ்வொரு வீடாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் மகளிர்களுக்கு இலவச பேருந்து பயணம் 1000 உாிமைத்தொகை கல்லூாி மாணவ மாணவிகளுக்கு 1000 கல்வி உதவித்தொகை பள்ளியில் காலை உணவு திட்டம் என எல்லா வகையிலும் சாதனை தொடர்கிறது. முதலமைச்சர் வௌிநாடு சென்று பல முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதின் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கின்றது, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாட்டு நலனில் அக்கறையுடன் பணியாற்றுகிறார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கனிமொழி எம்.பி எல்லோரும் மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் ஓட்டப்பிடாரம் ஆகிய ெதாகுதிகளிலும் வெற்றி உறுதி. முதலமைச்சர் 200 தொகுதியை நிர்ணயம் செய்துள்ளார். இந்தியாவிற்கே வழிகாட்டும் முதலமைச்சராக நம்முடைய தளபதியார் விளங்குகிறாா். உங்களை நம்பிதான் முதலமைச்சர் பல திட்டங்களை திட்டமிட்டு அறிவிப்பு செய்கிறாா். திராவிட மாடல் ஆட்சியில் எல்ேலாருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்கின்றன. நாம் அனைவரும் திட்டமிட்டு முறையாக பணிகளை மேற்கொண்டால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் அதற்கு அனைவரும் சபதம் ஏற்கவேண்டும். என்று பேசினார்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் மாடசாமி, ஓன்றிய செயலாளர் புதூர் சுப்பிரமணியன், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமாா், மாணவரணி அமைப்பாளர் அருண்குமாா், சிறுபான்மை அணி தலைவர் ராஜாஸ்டாலின், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ராஜ், ஜெயராஜ், செல்வின், ஜெயக்குமாா், மைக்கேல்ராஜ், கபாியேல்சைமன், மாிய பொன்னம்மாள், வலைதள பொறுப்பாளர்கள் மீனாட்சி அன்னலட்சுமி, ஓன்றிய அணி அமைப்பாளர்கள் சண்முகநாராயணன், சற்குணம், மகேந்திரன், வரலட்சுமி, விஜயபாரதி, கேம்நாத்ஜெகன், பொன்செல்வன், மொபட் ராஜன், ஜெயராஜ் ஞானசீலன், பாலசுப்பிரமணியன், மணிகண்டன், சௌந்திரபாண்டியன், ஈஸ்டர்ராஜ், தனசிங், ஆல்வின்பரத், ஜெயசீங் கிருபாகரன், அன்பரசன், சிவராஜ், மகாலிங்கம், மாாிமுத்து, பால்ராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் பொன்னரசு நன்றியுரையாற்றினார்.

