தமிழ்நாட்டின் 2 வது சிறந்த மாநகராட்சியாகத் தேர்வாகி சுதந்திர தின விழாவில் முதல்வர் விருது பெற்ற தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகிய இருவருக்கும் கனிமொழி எம்பி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் இரண்டாவது சிறந்த மாநகராட்சியாகத் தேர்வான தூத்துக்குடி மாநகராட்சிக்கு சுதந்திர தினவிழாவில் விருது வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை சென்னை சிஐடி காலனி இல்லத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் சந்தித்து, பாராட்டு சான்றிதழைக் காண்பித்து மகிழ்ந்தனர். கனிமொழி எம்.பி, அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

