தூத்துக்குடி ஆகஸ்ட் ,12,
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய சுகாதார திட்டம் 15 வது நிதிக்குழு (சுகாதார பிரிவு) மற்றும் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூபாய் 29 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த புதிய கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன்படி, தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ66 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம், மடத்தூர் பி & டி காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ 63 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம், கணேஷ் நகர் பகுதியில் ரூ60 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம், எழில் நகர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான ரூ30 லட்சம் மதிப்பில் துணை மைய கட்டிடம், முத்தம்மாள் காலனி பகுதியில் ரூ30 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான துணை மையக் கட்டிடம், விவிடி குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் ரூ10 கோடியே 73 லட்சம் மதிப்பில் நகர மாநாட்டு மையம், சிதம்பரம் நகர் பகுதியில் ரூ 16 கோடியே 22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் கட்டும் பணிகள் என மொத்தம் 29 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இதனையடுத்து 2ம் கேட் பத்திரகாளியம்மன் கோவில் அருகில் மாநகராட்சி மாநாட்டு மையம் வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 104 புதிய பணிகள் முடிவுற்ற கட்டிடங்களை திறந்து வைத்துள்ளார். 2021ம் ஆண்டு தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அனைத்து துறைகளும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கென்று 425 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை, கால்வாய், உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் புதிதாக கால்வாய் வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் தேங்காத நிலை உருவாகியுள்ளது. சில பகுதிகளில் இன்னும் பணிகள் மேற்காௌ்ளப்பட இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக இந்த மாவட்ட வளா்ச்சிக்கென்று உழைக்கும் கனிமொழி எம்.பி, மாநகராட்சி மேயர், அரசுத்துறை அதிகாாிகளின் ஒத்துழைப்போடு நடைபெறும் எல்லாத்துறைகளும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் வளர்ச்சி யடைந்துள்ளது. கல்வியும் மருத்துவமும் இரண்டு கண்கள் என்று முதலமைச்சர் எப்போதும் விழாக்களில் கூறுவார் அதன்படி கல்விக்கென்று 40 ஆயிரம் கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு பல பள்ளி கட்டிடங்கள் கான்கீாிட் கட்டிடங்களாக தரம் உயர்த்தப்பட்டு கல்வி தரமும் உயர்ந்துள்ளது. அதன்மூலம் மாணவ மாணவிகள் எண்ணிக்கையும் அதிகாாித்துள்ளது. தூத்துக்குடியில் 100 கோடியில் அனைத்து வகையான உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய மருத்துவ சிகிச்சைமையம் கட்டப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதர நிலையங்களின் மூலம் மருத்துவ துறையும் சிறந்து விளங்குகிறது. தினசாி 2000 பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கிட்னிபாதிப்பு இருதய கோளாறு உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் தீர்த்து வைப்பதற்கு புதிய கட்டிடம் திறப்பிற்கு பின் உதவும் என மாணவிகளை தொடர்ந்து மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் ஆயிரம் வழங்கப்படுகிறது. இப்படி ஒவ்வொன்றாக பார்த்து எல்லா துறைகளிலும் முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். என்று பேசினார். பின்னர் அமைச்சா், மேயர், ஆணையர் உள்ளிட்ட அதிகாாிகள் முழுமையாக மாநாட்டு மையத்தை பார்வையிட்டனர்.
விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, பொறியாளா் சரவணன், உதவி ஆணையர்கள் சொர்ணலதா, சுரேஷ்குமாா், கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர்கள் பிாின்ஸ் ராஜேந்திரன், முனீர்ரபிக், நகர்நல அலுவலர் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகரன், மாநகர செயலாளர் ஆனந்தசேரகன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, சுகாதாரகுழு தலைவர் சுரேஷ்குமாா், நகரஅமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், கவுன்சிலர்கள் ராமுஅம்மாள், சந்திரபோஸ், வைதேகி, செபஸ்டின்சுதா, ஜெயசீலி, சுப்புலட்சுமி, சரவணக்குமார், பொன்னப்பன், கண்ணன், இசக்கிராஜா, ஜான்சிராணி, பவாணி, மெட்டில்டா, தனலட்சுமி, முத்துமாாி, மும்தாஜ், கற்பககனி, ஜாக்குலின்ஜெயா, பேபிஏஞ்சலின், சரண்யா, மாியகீதா, தெய்வேந்திரன், முத்துவேல், கனகராஜ், கந்தசாமி, விஜயலட்சுமி, மகேஸ்வாி, பட்சிராஜ், சுயம்பு, விஜயகுமார், ரெக்ஸின், மாவட்ட திமுக அணி அமைப்பாளர் கவிதாதேவி, துணை அமைப்பாளர்கள் பிரபு, நாகராஜன், கோகுல்நாத், சோமநாதன், மாநகர அணி அமைப்பாளர் அருண்சுந்தா், சாகுல்ஹமீது, துணை அமைப்பாளர் வினோத், தலைவர் சக்திவேல், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், கங்காராஜேஷ், மனோ, பொன்ராஜ், செல்வராஜ், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், துரை, செல்வம், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மகளிர் அணி ரேவதி, சத்யா, டோலி, கன்னிமாியாள், மற்றும் மணி, அல்பட், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா், உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாக்ஸ் நியூஸ் :மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் சீர்மிகு நலத்திட்டத்தின்கீழ் முதலமைச்சாின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த மண்டபம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் குறைந்த வாடகையில் வழங்கப்படவுள்ளது இன்னும் ஓரிரு மாதத்தில் முழுமையாக பணிகள் முடிவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த பகுதியில் சுமார் 100 கார்கள் நிறுத்தும் வசதி உள்ளது 1000 பேர் வரை அமரலாம் இந்த மண்டபத்திற்கும் சிதம்பர நகர் வணிக வாளகத்திற்கும் குளிரூட்டப்பட்ட சாதனங்கள் பொருத்தப்படவுள்ளன. பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் மாநகர வளர்ச்சிக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் எம்.பி, மற்றும் அமைச்சர்களுக்கு நன்றியை தொிவித்துக்கொள்கிறேன். என்றார்.


