சென்னை
அதிமுக நிறுவனத்தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.இராமச்சந்திரன் அக்டோபர் 17ம் தேதி 1972ம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அண்ணா உருவம் பதித்த கொடியுடன் தமிழகத்தில் கால்பதித்த முதல் திண்டுக்கல் தேர்தலில் முதல் வெற்றிப்புள்ளியை இரட்டை இலையில் தொடங்கி அவர் மறையும் வரை தொடர்ந்து முதலமைச்சராக பணியாற்றினார். உடல்நலம் குன்றி அமெரிக்காவில் உள்ள புருக்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அப்போது கொள்கைபரப்புச்;செயலாளராக இருந்த ஜெயலலிதா தமிழகம் முழுவதும் முழுமையாக செய்து அதிமுகவிற்கு பக்கபலமாக இருந்தார்.
எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்பு சிறிய சோதனையை சந்தித்த ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றப்பின் இரண்டு முறை தொடர் முதலமைச்சராக பணியாற்றியது மட்டுமின்றி கட்சியை இராணுவ கட்டுப்பாட்டுடன் வழிநடத்தி வந்தார்.
அமைச்சர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை முறையாக பணி செய்யாமல் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானால் பாரபட்சமின்றி உடனடியாக பதவியை பறிப்பதும், கட்சியை விட்டு நீக்குவதும் அவருக்கு நிகர் அவர் தான்.
தேர்தல் என்ற பயணம் மட்டுமின்றி அரசியல் களத்திலும் எதிர்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது மட்டுமின்றி கருணாநிதி ஒரு தீய சக்தி அந்த சக்தியை தமிழகத்தை விட்டே அகற்ற வேண்டும் என்ற அரைகூவலோடு கட்சி கட்டமைப்பை முறைப்படுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு பணியாற்றியது மட்டுமின்றி மத்திய அரசின் நல்ல கொள்கைகளுக்கு மட்டும் துணையாக இருந்து அதிமுக மத்திய அரசின் அமைச்சரவையிலும் அங்கம் வகித்தது.
தேவையில்லாத சட்டங்களையும், திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எண்ணும் நேரத்தில் தமிழகத்திற்கு தேவையில்லாத சட்டமாகவும், திட்டமாகவும் இருந்தால் அதை எதிர்ப்பதிலும், ஆதரிப்பதிலும் தனக்கென்று தனிப்பாணியை உருவாக்கி தன்னிகரில்லா தலைவராக திகழ்ந்தார். எதிர்கட்சிகளுக்கும் எதிரிகளுக்கும் எப்பொழுதும் பதிலுரை அளிக்கும் பொதுச்செயலாளராகவும் இருந்தார்.
இந்நிலையில் அவரது மறைவிற்கு பிறகு மூன்றாம் தலைமுறை தலைமைப் பொறுப்பை ஏற்று அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சராகவும், எதிர்கட்சித்தலைவராகவும் பணியாற்றி வரும் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் பல அவலங்களையும் தமிழக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போதை மாநிலமாக மாறி வருவதை தடுக்க தவறிய திமுக அரசை வீழ்த்துவது தான் அதிமுகவின் லட்சிய கொள்கையாகும், என முழக்கமிட்டு 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை 234 தொகுதிகளிலும் எதிர்கொள்வதைப் பற்றி சிந்திப்பதும், மீண்டும் அதிமுக ஆட்சியே அமைப்பது தான் நம்முடைய இலக்கு என்று பணியாற்றி வரும் நிலையில், தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதில் தூத்துக்குடி தொகுதி டெபாசிட் இழந்தது. இதற்கு காரணமென்ன என்று சில நாட்களுக்கு முன்பு வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று சில கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இதுபோன்ற நிலை எதிர்காலத்தில் வராமல் இருப்பதற்கு உள்ள வழிகளை பொறுப்பில் உள்ளவர்கள் உணர்ந்து செயல்படாதது தான் தோல்விக்கு காரணமென தூத்துக்குடி அதிமுகவினரின் புலம்பல். இதற்கு என்ன வழி என்பதை அதிமுக நிர்வாகி ஒருவரிடமே கேட்டபோது: அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் பலருடன் தொடர்பில் இருப்பதால் இதுபோன்ற தொய்வுகள் ஏற்பட்டது.
ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத காலக்கட்டத்திலும் கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை எளிமையோடு பழகுபவரை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம் என மும்மதத்தை சேர்ந்தவர்களும் தங்களது திருவிழா பண்டிகை காலங்களில் தேடி வருபவர்களை உதாசீணப்படுத்தாமல் உதவிகள் செய்பவரையே விரும்புகின்றனர்.
தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரையில், எம்ஜிஆர் அமைச்சரவையில் எஸ்.என்.ராஜேந்திரன், ஜெயலலிதா அமைச்சரவையில் சி.த.செல்லப்பாண்டியன் பணியாற்றினார்கள். தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் மட்டுமின்றி மனித நேயத்தோடு பணியாற்றுபவர்களை அதிமுகவினர்கள் மட்டுமின்றி கட்சியை சாராமல் நடுநிலையாளர்களும் எதிர்பார்க்கும் நிலை உள்ளது. இதற்கேற்றார்போல் தூத்துக்குடி தொகுதி மட்டுமின்றி மற்றுமொரு தொகுதியையும் இணைத்து இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற பதவியை வழங்கி செயல்படுத்தினால் மட்டுமே இனி வரும் காலங்களில் தேர்தல் சமயத்தில் பணி செய்வதற்கும், நிர்வாகிகள் உள்பட தொண்டர்கள் வரை தங்களது இல்லங்களில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளுக்கும் கலந்து கொள்ளும் வகையில் புதிய மாவட்ட செயலாளரை நியமனம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிலை உள்ளது.
2026ல் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக தலைமை அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

