• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொடைக்கானல்  மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து மாபெரும்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:  தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர்  வதிலை செல்வம் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

policeseithitv by policeseithitv
August 3, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொடைக்கானல்   மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து மாபெரும்   கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:      தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர்   வதிலை செல்வம் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

 

கொடைக்கானல்

ஆக, 4

 

கொடைக்கானல் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறாக செயல்படும் சில அரசு அதிகாரிகள் மீதும், அவர்கள் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு உறுதுணையாக இருந்து கொண்டு பொது மக்களுக்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனபோக்கோடு செயல்பட்டு வருவதை கண்டித்தும், தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நடைபெற்றது.

நேற்று (02-08-2024) அன்று தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்

கொடைக்கானல்

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யவும்,

கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் மெத்தன போக்கை கண்டித்தது, உள்ளிட்ட

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வதிலை செல்வம் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.

அவர் பேசுகையில

கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், வாகன நிறுத்துமிடம் போன்றவற்றை பொதுஏலம் விடாமல் தனிச்சையாக செயல்படுவதால் கொடைக்கானல் நகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்றி, பொது ஏலத்திற்கு கொண்டு வர வேண்டும். மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கேட்டு கொள்கிறேன்.

அதுபோல்

கொடைக்கானல் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடங்களில் தனி நபர்களின் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த தவறி வருவதால், ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களில் புதிய புதிய கடைகள், கட்டிடங்கள் உருவாகி வருகின்றன.

இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் நகராட்சிகளுக்கும் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட முன்வரவேண்டும் .

பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும், வியாபாரிகளையும், அச்சுறுத்தும் வகையில் செயல்படும் கொடைக்கானல் வனத்துறை அதிகாரிகள் அத்துமீறல் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை காளான் ஆகியவற்றை விற்பனை செய்து வரும் சட்ட விரோத கும்பல்கள் மீது காவல்துறை பாரபட்சமின்றி இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டுமென பேசினார் .

கொடைக்கானலில் வாழும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே உள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதால் கொடைக்கானல் சுற்றுலாத்தளம் வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் சிரமமின்றி வந்து செல்வதற்கு தடையாக உள்ள ‘இ-பாஸ்” நடைமுறையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு

திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவர் கோடை.வி.

ஆனந்த் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் ஆர். சதன் வேட்டையன், பழனி, பி கார்த்திக், திண்டுக்கல் மாநகர செயலாளர் டி.எம் வினோத்ஜி, மாநில தொண்டரணி பொது செயலாளர்

இனியன் சம்பத், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு பொதுச் செயலாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் பெஞ்சமின், மாவட்ட செயலாளர், மாணவரணி பொதுச் செயலாளர் பிரேம், மாவட்ட தொண்டரணி செயலாளர் எபி(எ) எபனேசர் , திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் கோடாங்கிபட்டி சுதாகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ் பாலன், மாவட்ட தொண்டரணி செயலாளர் வினோத் கண்ணன், மாவட்ட தொண்டரணி துணை தலைவர் வீரபாண்டி,

மாவட்ட மாணவரணி செயலாளர் விஜய், மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் நாட்ராயன், மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் ரங்கேஷ், , கொடைக்கானல் ஒன்றிய செயலாளர் முருகேசன், கொடைக்கானல் நகர செயலாளர் வசிகரன்,.நகர இளைஞரணி தலைவர் சிவக்குமார், நகர இளைஞரணி செயலாளர் சக்தி, நகர தொண்டரணி துணை தலைவர் டேவிட், மற்றும் நிர்வாகிகள், நவீன், ஜோஸ்வா, வத்தலக்குண்டு ஒன்றிய துணை தலைவர் சுந்தரபாண்டி, வத்தலக்குண்டு ஒன்றிய இளைஞரணி செயலாளர் தினேஷ், வத்தலக்குண்டு ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சச்சின், வத்தலக்குண்டு ஒன்றிய தொண்டரணி துணை செயலாளர் விக்கி(எ)விக்ரம், ஒன்றிய மாணவரணி செயலாளர் தங்கப்பாண்டி, ஆத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் முரளி, மற்றும் கொடைக்கானல், திண்டுக்கல் மாநகர,வத்தலக்குண்டு, ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரத்தில் சில அதிகாரிகளின் இடையூறுகள் அதிகரித்து வந்த நிலையில்

பொதுமக்களில் நலன் கருதி

தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிரடியாக நடைபெற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு அமைப்புகள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டது. கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தி

தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் போராட்ட களத்தில் குதிக்க முன்வந்துள்ளனர். தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி கோரிக்கையை

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தூத்துக்குடியில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்

Next Post

உலக பிரசித்திப் பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் அமைச்சர் கீதாஜீவன் பிரார்த்தனை

Next Post
உலக பிரசித்திப் பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் அமைச்சர் கீதாஜீவன் பிரார்த்தனை

உலக பிரசித்திப் பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் அமைச்சர் கீதாஜீவன் பிரார்த்தனை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In