தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும் ஓப்பந்ததாரர்களிடம் நல்ல முறையில் செய்து கொடுக்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்து வருவது மட்டுமின்றி மாநகராட்சி அலுவலகம் போல்பேட்டை முகாம் அலுவலகங்களில் பொதுமக்கள் நோில் சந்தித்து கொடுக்கும் மனுக்களுக்கு தங்களது கருத்துக்களை கேட்டறிந்து அதற்கும் அரசின் சட்டதிட்ட விதிகளின் படி தீர்வு கண்டு வருகிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட பணிகள் நிறைவு பெறும் நிலையிலுள்ள சிதம்பரநகர் புதிய வணிக வளாக கட்டிடத்தையும் பின்னர் 2ம்கேட் வடபத்திரகாளியம்மன் கோவில் எதிரில் உள்ள ராஜமன்னார் தெரு பகுதியில் உள்ள புதிய கட்டிடத்தையும் பார்வையிட்டு மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்து கூறுகையில் “தமிழக முதலமைச்சர் தளபதியார் உத்தரவிற்கிணங்க பல்ேவறு பணிகளை செய்து வரும் நிலையில் சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ் மாநகராட்சி மையப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தையும், 2ம்கேட் வடபத்திரகாளியம்மன் கோவில் எதிரில் உள்ள ராஜமன்னார் தெரு பகுதியில் உள்ள புதிய கட்டிடத்தையும் பார்வையிட்டோம், இந்த கட்டிடத்தின் உள்புறத்தில் ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் 700 பேர் அமர்ந்து கருத்தரங்கம் மற்றும் பல நிகழ்வுகள் நடத்துவதற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பத்துடன் ஏசி பொருத்தப்பட்ட ஹால், அமைக்கப்பட்டுள்ளது. அதில் கீழ் தளத்தில் கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. அனைவரும் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்று தொிவித்தார்.
உடன் பகுதி செயலாளர் சுரேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, வட்ட செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ேஜாஸ்பா், உள்பட பலர் உடனிருந்தனர்.

