தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் பல்வேறு துறைகளின் மூலமாக நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளருமான குமார் ஜெயந்த் தலைமையில் கலெக்டர் லட்சுமிபதி முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அரசின் திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்திடும் வகையில் இன்றைய தினம் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
குறிப்பாக ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்களில் துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்தும், மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரும் குடிநீரின் அளவு குறித்தும், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம், சீர்மிகு நகரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்தும், நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம், நிதிக்குழு மானியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும், ஊரகப் பகுதிகளில் ஜல்ஜீவன் மிஷன், முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டம், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எவ்வளவு பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது, நடைபெற்று வரும் பணிகளின் நிலைகுறித்தும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாகரூ.515.72 கோடிமதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், ரூ.12.80 கோடிமதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 20 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடிமருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்தும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலமாக அனைத்து வட்டங்களிலும் 49 தானியங்கி மழை மானிநிலையங்கள் அமைக்கப்பட்டுவரும் பணிகள் குறித்தும், பொதுமக்கள் இருக்கும் இடத்திலே இணைய வழி முகவரிவாயிலாக பட்டாமாறுதல், உட்பிரிவுடன் கூடிய பட்டாமாறுதல், புலஎல்லை மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பெறுவதற்கு நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டுள்ள எங்கிருந்தும், எந்த நேரமும் இணை வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதிகளின் செயல்பாடுகள் குறித்தும், நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி,குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றிஎடுத்துபயன்பெறுவதற்குதற்போதுவரைபயனாளிகளுக்குவழங்கப்பட்டுள்ளஅனுமதிஆணைகளின் எண்ணிக்கைகுறித்தும்,நீர்வளத்துறையின் மூலமாககீழ்தாமிரபரணிமற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம், வைப்பாறு வடிநிலக்கோட்டம் ஆகிய வடிநிலக் கோட்டங்களில் நடைபெற்று வரும் வெள்ளத்த டுப்புப்பணிகள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்தும் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு அரசு அலுவலரும் அரசுஎன்னநோக்கத்திற்காகதிட்டங்களைசெயல்படுத்துகிறதுஎன்பதைஅறிந்துசெயல்படவேண்டும். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பரிசீலனைசெய்து உரியகாலத்திற்குள் நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். பல்வேறுதுறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டுவரும் குடிநீர் திட்டப்பணிகள், வெள்ளத் தடுப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் உள்ளிட்ட பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பாக விரைவாகவும், தரமாகவும் திட்டமிட்டப்படி நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து முனைப்புடன் பணியாற்றிட வேண்டும் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் பிரபு மற்றும் பல்வேறு துறைசார்ந்த அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

