தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட ஸ்டேட் பேங்க காலணியை சேர்ந்த சீனிவாசன் தனது மைத்துனர் தொழிலதிபர் தனசேகரன், என்பவர் தன்னிடம் 15 லட்சம் கடன் பெற்று 3 காசோலைகள் வழங்கியதாகவும் காசோலைகளை வசூலுக்கு தாக்கல் செய்தது பணம் இல்லை என திரும்பி விட்டதாகவும் கடன் பெற்ற மோசடி செய்ததாக தனசேகரன் மீது காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை நடைபெற்று வந்தது. வழக்கினை விசாாித்த விரைவு விசாரணை நீதிமன்ற நீதிபதி ஜலதி வழக்கினை தள்ளுபடி செய்து தனசேகரனை குற்றவழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தார். தனசேகரன் சார்பாக வழக்கறிஞர் சுபேந்திரன் ஆஜரானார்.

