சட்டமன்ற தேர்தலில் அமமுக – தேமுதிக கூட்டணி அமைத்ததை தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் , துணை தலைவர் எல்.கே.சுதிஷ்,பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

