தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக & பாஜக – தமாக கூட்டணி சார்பில் தமாக தெற்கு மாவட்ட தலைவர் எஸ்டிஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நேற்று அவர் ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி 3மைல் பகுதியில் இருந்து வாகனங்களில் பேரணியாக அதிமுக கூட்டணி கட்சியினர் அணிவகுத்து வந்தனர். தூத்துக்குடி பழைய தாலுகா அலுவலகம் வரையில் வந்ததும் வேட்பாளருடன் சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரான சப் கலெக்டர் சிம்ரன்ஜித்சிங் கலோனிடம் தமாக வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் பாஜக மாவட்டதலைவர் பால்ராஜ், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் மனோஜ் ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தமாக மாற்று வேட்பாளராக ரீனா சீலன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

