திருநெல்வேலி, ஜூன்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு துணை தலைவராக நெல்லை மாவட்டம் பரப்பாடியை சோ்ந்த வக்கீல் டி. காமராஜ் செயல்பட்டு வந்தார். இவர் சிறுவயதில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் மீதும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மிகப்பெரிய பற்றும் மரியாதையும் கொண்டவர். கல்லூரி பருவத்தில் மாணவர் காங்கிரஸ் தலைவராகவும், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
தற்போது இவருக்கு கட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான மாநில செயல் தலைவர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது.
அகில இந்திய கங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மாணிக்கம் தாகூர் பிற்படுத்தப்பட்டோர் துறை மாநில தலைவர் நவீன் ஆகியோர் ஒப்புதலின்பேரில், தமிழகத்தில் புதிதாக 6 மாநில செயல் தலைவர்களை அகில இந்திய தலைவர் அஜய்சிங் யாதவ் நியமித்து உள்ளார். நெல்லை மாவட்டத்தில் இருந்து வக்கீல் காமராஜ் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

