தூத்துக்குடி, ஜூன், 15
செய்துங்கநல்லூர் அனைத்துக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கிராமப் பகுதி மாணவ, மாணவியர்களை கல்வியில் ஊக்குவிக்கும் வகையில் சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவிப்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
செய்துங்கநல்லூர் பகுதியில் முழுவதும் கிராமப்புற மாணவ மாணவிகள் மட்டும் பயிலும் ஜோஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10ம் வகுப்பு ஆரம்பிக்கப் பட்டு மூன்று கல்வி ஆண்டுகள்தான் ஆகிறது. இந்த குறுகிய காலகட்டத்தில்
இந்தப் பள்ளியின் கல்வித்தரம் என்பது இமயம் போல் உயர்ந்து காணப்படுகிறது. இதில் கடந்த 2023-24ம் கல்வி
ஆண்டில் 22 மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதியதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதுடன் 21 பேரும் 400க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.



அதிலும் இரண்டு மாணவிகள்
பவுசியா சிரன் (494)
இவாஞ்சலின் (494) மகாலட்சுமி (493). மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை மாணவர்களை உருவாக்கிய சிறந்த முறையில் கற்றுக் கொடுத்த பள்ளி முதல்வர்
செய்துன்பீவி, ஆசிரியர்கள் அங்கையர்கனி, சந்தன லட்சுமி, பெருமாள், சசிகுமார், ஜெயலட்சுமி, ரஷ்யா,
ஆகியோரின் சாதனைகளை பாராட்டும் விதமாக செய்துங்கநல்லூர் அனைத்து கடை வியாபாரிகள் நலச் சங்கம் சார்பாக சாதனைபடைத்த மாணவிகளுக்கு பகேடயமும், இந்த சாதனைக்கு ஊக்குவித்த பள்ளியை பாராட்டும் விதமாக பள்ளி நிர்வாகத்திற்கு
வியாபாரிகள் சங்கம் சார்பில்
கேடயமும் வழங்கப்பட்டது. பள்ளியின் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவரும்
ஏடூ இசட் பிரிண்டர்ஸ் நிறுவனருமான
கே.எஸ்.முருகன், செயலாளர் கே.கே.
மெடிக்கல்ஸ , மோத்தி முஸம்மில், பொருளாளர் மாதா டிராவல்ஸ், திருச்செல்வம், துணைத்தலைவர் டேவிட் ஸ்டோர்ஸ், சந்தியாகு டேவிட், இணைச் செயலாளர் பாலாஜி மெடிக்கல், செந்தில் சுப்பிரமணியன்,
கவுரவ ஆலோசகர் ஜெயசீலன் சாமுவேல், செயற்குழு உறுப்பினர்கள் ஒலிம்பிக், நாகூர்மீரான், செல்வி ஸ்டோர், வீரபத்திரன், கோகிலா ஏஜென்சி, கார்த்திக், எஸ்.வின் ரெடிமேட்ஸ், செல்வின்துரை, மதுபாலாசுடலைமணி,சக்தி ஸ்டிக்கர்ஸ், மகாராஜன், குருகோமதி ஏஜென்சி, வேல்முருகன், ஏ.கே.கன்ஸ்ட்ரக்ஷன், அப்துல்காதர், கோமதி பைனான்ஸ்
முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த கிராமப்புற பகுதியில் உள்ள மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்களை ஊக்குவித்த ஆசிரியர் பெருமக்களை
செய்துங்கநல்லூர் அனைத்து கடை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் பாராட்டிய செயல்கள் சுற்றுவட்டார கிராமத்தில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. சமூக அக்கறையோடு
வியாபாரி சங்கம் செயல்பட்டு வருவதற்கு மற்றொரு முன்னுதாரணமாக செய்துங்கநல்லூர் பஜாரில் எந்தவிதமான அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் கண்காணிப்பு கேமரா பல முக்கிய இடங்களில் நிறுவ செய்துங்கநல்லூர் அனைத்து கடை வியாபாரிகள் நல சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் எடுத்து வந்த நடவடிக்கை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று
சமூக அக்கறையோடு செயல்படும் வியாபாரிகள் சங்கத்திற்கு ராயல் சல்யூட்..

