தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், கலெக்டர் லட்சுமிபதி, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 344 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதுஉரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமைதிட்டத்தின் கீழ் பண்ணை உற்பத்தி பணியாளர்களுக்கு தார்ப்பாய் மற்றும் விசைதெளிப்பான்; இயந்திரத்தினை 5 நபர்களுக்கு வழங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகம் சார்பில், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் மூலம் ஓய்வூதியத்தை 9 பயனாளிகளுக்கு வழங்கினார். மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர்உரிமைத்துறைசார்பில், அன்னை சத்தியவாணி முத்துஅம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார். ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்று இரண்டு தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவன் நூ.முகமதுபிலால் என்பவரை பாராட்டி கௌரவித்தார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, இலவசவீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக் கருவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 18 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதுஉரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்டவருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்டபிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் விக்னேஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சேதுராமலிங்கம், சமூகபாதுகாப்பு திட்டதுணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட சமூகநல அலுவலர் பிரேமலதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

