தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தினமும் தனது இல்லத்தில் உள்ள அலுவலகத்திலும் எட்டையாபுரம் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகமான கலைஞர் அரங்கத்திலும் பொதுமக்கள் கட்சி பிரமுகர்கள் சமூக நல அமைப்பை சார்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் சந்தித்து பல்வேறு கோாிக்கை மனுக்களையும் உதவிகள் வேண்டியும் வருகின்றன.
அதில் அரசு சார்ந்த கோாிக்கை மனுக்களுக்கு அத்துறைசார்ந்த அதிகாாிகளுக்கு பாிந்துரைப்பதும் சட்டமன்ற ெதாகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் பல பணிகள் அரசு சார்ந்து நடைபெற்றாலும் சில பணிகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து அதை மேற்கொள்வதும் வாடிக்கையாக வைத்துள்ள நிலையில் ஏழை எளிய குடும்பத்தை சார்ந்தவர்கள் தங்களது ெதாழிலுக்கு சார்ந்த உபகரணபொருட்கள் என பல உதவிகளையும் நாடி வருகின்றன. அதனடிப்படையில் கல்லூாியில் படிக்கும் மாணவன் தனக்கு சைக்கிள் வேண்டும் என்று கோாிக்கை வைத்திருந்த நிலையில் அவருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.
அதே போல் நடைபாதை சாலையோரங்களில் வியாபாரங்கள் மேற்கொள்ளும் சிறு வணிகர்களுக்கும் வெயில் மற்றும் மழைகாலங்களில் பாதுகாப்பாக இருந்து வியாபாரம் மேற்கொள்வதற்கு வசதியாக பொிய ஸ்டாண்டுடன் கூடிய பொிய குடையும் வழங்கப்பட்டது. சிலருக்கு தையல் இயந்திரங்கள் மீனவர்களுக்கு அவர்கள் தொழில்சார்ந்த உபகரண பொருட்கள் என தொகுதி முழுவதும் கோாிக்கை வைப்பவர்களுக்கு அதை நிறைவேற்றி முழுமையாக அமைச்சர் கீதாஜீவன் உதவிபுாிந்து வருகிறார்.
இதுகுறித்து ஏழ்மைநிலையில் இருந்த ஓருபெண் கூறுகையில் நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் திருமண காலத்திற்கு பின் போதிய அளவு வருமாணம் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்தோம் எங்களது குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக மிகவும் சிரமப்பட்ட நேரத்தில் சிலர் அமைச்சரைசந்தித்து கோாிக்கை வையுங்கள் என்று கூறினார்கள் அதன்படி இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து மனுவாக அளித்தேன் அது கொடுத்த சில தினங்களில் நாங்கள் எதிா்பார்த்ததை விட நல்ல உதவியை செய்து கொடுத்தார்கள். இதுபோன்ற மனிதநேயம் எல்லோருக்கும் அமைவது என்பது இருக்காது அமைச்சருடைய இந்தஉதவிக்கு என்றும் நன்றி கடன்பட்டவர்களாக திமுகவிற்கு நாங்கள் எப்போதும் விசுவாசமாக இருப்போம் என்று கூறினாா்.
மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர சிறுபான்மை அணி அமைப்பாளர் சாகுல்ஹமீது, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

