தூத்துக்குடி,
மே,22
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணியில் பல்வேறு பகுதிகளில் மழை நீரானது வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம்
சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோரின் ஆலோசனையின் பெயரில்
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் இரவு, பகல் பாராமல் மீட்பு நடவடிக்கைகளில் அந்த நேரத்தில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு மழையால் பாதிக்கப்பட்ட அந்த ஊராட்சி பகுதிகளில் முழுமையான சீரமைப்பு பணிகள் நடைபெற பல்வேறு ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறார் பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் .
இந்தத் தொடர் பணிகளால் மழை வெள்ளத்தால்பெரும் பாதிப்புகளில் இருந்த மாப்பிள்ளையூரணி கிராமம் தற்போது மீண்டு வருகிறது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு சுமார் 5 அடிக்கு மேல் வரை வெள்ள மழை நீர் வீட்டுக்குள் புகுந்து சூழ்ந்திருந்தத
மாப்பிள்ளையூரணி கிராம பகுதியான
பெரிய செல்வம் நகர் பகுதியில் சாலைகள் முழுமையாக சேதம் அடைந்து விட்டது. அதுபோல் அந்தப் பகுதியில் குடிநீர் பிரச்சனையும் காணப்பட்டதால்
இதனை சீரமைத்து கொடுக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும்
பெரிய செல்வம் நகர் பகுதி குடியிருப்பு நல சங்கத்தினர்
பஞ்சாயத்து தலைவர் சரவணகுமாரிடம் கோரிக்கை வைத்து தங்கள் பகுதியில் உள்ள சாலைகள், மற்றும் சீரான குடிநீர் விநியோகம் கேட்டு கோரிக்கை வைத்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் பெரிய செல்வம் நகர் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு
மழையால் பாதிக்கப்பட்ட
சாலைகளை முழுமையாக சீரமைக்கவும், சீரான குடிநீர் வழங்கிடவும் இந்த பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க இப்பகுதியில் முழுமையான ஆய்வு மேற்கொண்டார்
கிராம மக்களின் கோரிக்கைக்கு உடனுக்குடன்
செவி சாய்த்து
அதிரடி பணிகள் மேற்கொள்ளும்
பஞ்சாயத்து தலைவர் சரவணகுமாருக்கு பெரிய செல்வம் நகர் குடியிருப்பு நல சங்கத்தினர், மற்றும் பொதுமக்கள் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்த அதிரடி ஆய்வின் போது
பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் உடன் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொண் பாண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா,
திமுக ஓன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், கௌதம், உள்பட பலர் உடன் இருந்தனர் .

