தூத்துக்குடி
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி கருணாநிதி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு இந்தியா கூட்டணி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு அமைப்புகளிடமும் ஆதரவு கோாி வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கு ரத வீதியில் உள்ள சைவவேளாளர் திருமண மண்டபத்தில் சைவ வேளாளா் சங்க நிா்வாகிகளிடம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடி பேசுகையில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நாட்டிற்காக தியாகம் செய்து மறைந்த தலைவர்களை கௌரவித்து அவர்களது நினைவிடம் மாவட்டத்தில் உள்ள சிலைகளுக்கு ஆண்டுதோறும் அவர்களை நினைவுபடுத்தும் வகையில் அமைச்சர்கள் மூலம் கௌரவப்படுத்தி வருகின்றனர். இந்த மாவட்டத்தில் செக்கு இழுத்த செம்மல் சுதந்திர போராட்ட தியாகி வஉசியை கௌரவிக்கும் விதமாக திமுக ஆட்சி வந்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகாில் உள்ள ஓரு சாலைக்கு வஉசி சாலை என பெயாிட்டு கௌரவித்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு வரும் நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும கனிமொழிக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சண்முகம், சங்க நிர்வாகிகள் துரை, ராமமூர்த்தி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், சிவன் கோவில் அங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

