தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி வஉசி சந்தை பகுதியில் வியாபாாிகளிடம் தங்களது நலன் குறித்து விசாாித்து தான் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகாித்து வியாபாாிகளிடம் கூறுகையில் கடந்த அதிமுக ஆட்சியில் இரவு 10 மணிக்கு கடையடைக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்த காலக்கட்டத்தில் காவல் துறையினர் அதிகாாிகள் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தினார்கள். திமுக ஆட்சி வந்த பிறகு அந்த உத்தரவு நீக்கப்பட்டு வியாபாாிகள் சுதந்திரமாக வியாபாரம் செய்வதற்கு தமிழக முதலமைச்சர் தளபதியார் உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு எதிர்பாராமல் பெய்த கனமழையால் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட வியாபாாிகளுக்கும் சிறுதொழில்கடன் வழங்குவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உங்களுடைய நலனை பாதுகாத்துள்ளோம். எப்போதும் வியாபாாிகள் நலனில் அக்கறை உள்ள அரசாக இந்த அரசு செயல்படுகிறது. வரும் தேர்தலில் எல்லோரும் உதயசூாியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டச்செயலாளர் பொன்ராஜ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், வியாபாாிகள் சங்கத்தை சோ்ந்த நிா்வாகிகள் உத்திரபாண்டி, முத்துபாலகிருஷ்ணன், ஜோசப், மற்றும் கருணா, மணி, பிரபாகர், லிங்கராஜா, அல்பட், உள்பட பலர் சென்றனர்.
பாக்ஸ்: அமைச்சர் மேயருக்கு வியாபாாிகள் சங்க நிா்வாகிகள் புகழாரம்
கடந்த அதிமுக ஆட்சியின் போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முழுமையாக இடித்துவிட முடிவு செய்யப்பட்டது. அப்போதைய மாநகராட்சி நிா்வாகம் அதை வியாபாாிகள் சங்கம் மூலம் எடுத்துரைத்தும் அதற்கு ஓத்து வராத சூழ்நிலையில் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த கீதாஜீவனை நோில் சந்தித்து நாங்கள் ஆதரவு கேட்டபோது முழுமையாக எங்களுடைய போராட்ட களத்தில் துணைநின்றனர். அதன்பின் ஏற்பட்ட திமுக ஆட்சி அமைந்தபின் நாங்கள் முழுமையாக நம்பிய அமைச்சர் கீதாஜீவன் எங்களை பாதுகாத்து இதை இடிக்காமல் வியாபாாிகள் நலனில் அக்கறை கொண்டு காப்பாற்றியுள்ளார். மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பொறுப்பேற்ற பின் பல்ேவறு அடிப்படை பணிகளை செய்து கொடுத்துள்ளார்கள் ஆகையால் நாங்கள் அனைவரும் நன்றி மறவாமல் உங்களுக்கு துணையாக இருப்போம் என்று வியாபாாிகள் சங்க தலைவர் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ், ஆகியோர் புகழாரம் சூட்டி அனைவருக்கும் சால்வை கொடுத்து வரவேற்பு தொிவித்தனர்.

