ஸ்ரீவைகுண்டம், மார்ச்16: கமிஷன், கரப்ஷன் இல்லாத மக்கள் பணி செய்வேன் என்று ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் தனது முதல் கட்ட வாக்குறுதியில் கூறியுள்ளார்.
தி.மு.க கூட்டணியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி செல்வராஜ் மகன் ஊர்வசி அமிர்தராஜ், காங்கிரஸ் கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அறிவிப்பு வெளியானதும் ஸ்ரீவைகுண்டம்,நாசரேத்,சாத்தான்
தமிழகத்தில் ஏப்பரல் 6ம் தேதி சட்ட மன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒன்று ஸ்ரீவைகுண்டம் தொகுதி. இத்தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார். அவர் இத் தொகுதிக்கு புதியவர் அல்ல. அவரது தந்தை ஊர்வசி செல்வராஜ் கடந்த 2006ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது காலத்தில் ஸ்ரீவைகுண்டம் பாலம், சமுதாய நலக் கூடங்கள், சாலைகள் இல்லாத ஊர்களுக்கு சாலை வசிதி, பஸ் இல்லாத ஊர்களுக்கு பஸ் வசதி பல்வேறு தடுப்பணைகள், கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விழங்கும் மாணவர்களுக்கு சொந்த செலவில் ஊக்க தொகை மற்றும் மக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் ஆகியவற்றை செய்து கொடுத்தார்.
இது தவிர தனது சொந்த செலவில் முதியோர் பென்ஷன், சென்னையில் உள்ள அவரது கிங்ஸ் இன்ஜினியரின் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேற்படிப்பை தொடர முடியாத மாணவர்களுக்கு இலவச இன்ஞினியரிங் கல்வி உள்ளிட்ட பல நலத்திட்டங்களை தனது சொந்த செலவில் வழங்கினார்.
இவ்வாறு பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்து வந்த அவர் எதிர்பாராதவிதமாக திடிரென மரணமடைந்தார். அவரது மறைவிற்கு பின் அவரது மகன் ஊர்வசி அமிர்தராஜ் கடந்த 11 ஆண்டுகளாக தந்தை விட்டு சென்ற மக்கள் நலப் பணியினை தொடர்ந்து மகன் செய்து வருகிறார். இந் நிலையில் தற்போது தி.மு.க கூட்டணியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி மீண்டும் காங்கிரசிற்கே ஒதுக்கப்பட்டு ஊர்வசி அமிர்தராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொது செயலாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் இருந்து கட்சி பணியாற்றி வருகிறார்’’ என்றனர்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது குறித்து ஊர்வசி அமிர்தராஜ் கூறியதாவது : ’’எனது தந்தை ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்து போது அனைத்து மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அவரது வழியில் நானும் தொகுதி மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து மக்களின் நன்மதிப்பை பெறுவேன். தொகுதி முழுவதும் தரமான சாலைகள், குடிநீர் வசதி, விவசாயம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன்.தொகுதி மேம்பாட்டு நிதியில் எந்த வித ஊழலும் நடைபெறாமால் அனைத்து வேலைகளும் தரமாகவும் நடத்தி தருவேன். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விவசாயமே பிரதான தொழிலாகும். எனவே விவசாயத்திற்கு தேவையான தண்ணீர், உரம், விளை பொருட்களுக்கு உரிய விலை ஆகியவை கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். மேலும், கமிஷன், கரப்ஷன் இல்லாத மக்கள் பணி செய்வேன்’’ என்றார்.


