தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து ஜெஎஸ் நகர், பொன்னான்டி நகர், கிருஷ்ணாநகர், பொியார் தெரு, தோப்பு தெரு, அம்மன் கோவில் தெரு, ஐய்யன் கோவில் தெரு, சண்முகபுரம், தங்கம்மாள்புரம், சூசைநகா், மீனவர் காலணி, கேம்ப் 11, ஹார்பர் லேபர் காலணி, கோவில்பிள்ளை நகர், பண்டுகரை, கேம்ப 1, முத்துநகர், ஊரணி ஓத்தவீடு, காதர்மீராண் நகர் ஆகிய பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஓட்டு கேட்டு பேசுகையில்
திமுக ஆட்சி அமைந்தபின் கலைஞர் வழியில் தளபதியார் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் தமிழகத்திற்கு தேவையில்லாத எல்லா சட்டங்களையும் திட்டங்களையும், வாக்களித்தும், எடப்பாடி பழனிச்சாமி தலையாட்டி பொம்மையாக இருந்து கொண்டு ஆதரித்தார். இப்போது பிஜேபியுடன் தொடர்பு இல்லை என்று சொல்லி இரண்டு பேருமே நாடகமாடி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தேர்தலுக்கு பின்பு அவர்கள் இருவருமே இணைந்து விடுவார்கள். நாம் அதை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். தமிழக முதல்வர் ஆட்சியின் சாதனைகளை தின்னபைிரச்சாரம் மூலம் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். கட்சிக்கும் ஆட்சிக்கும் வலிமை சேர்க்க வேண்டும் வரும் நாடாளுமன்ற தோ்தலில் திமுகவை எதிர்த்து நிற்கும் கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது. கனிமொழி 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அந்த அளவிற்கு உங்களது களப்பணிகள் சிறப்பாக அமைய வேண்டும். அதே போல் கடந்த ஆண்டு எதிர்பாராமல் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ள பாதிப்பின் போது எல்லா தரப்பினருக்கும் நாம் ஓவ்வொரு வகையிலும் உதவிகள் செய்து மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றியுள்ளோம். என்பது பொதுமக்களுக்கு ெதாியும் அதிமுக பிஜேபி கட்சிகளுக்கு வரும் தோ்தலில் சாியான பாடம் புகட்ட வேண்டும் ஓன்றிய அரசு எந்த உதவியும் தமிழகத்திற்கு செய்ய வில்லை. முதலமைச்சர் தான் மழை வௌ்ளக்காலங்களில் எல்லோருக்கும் எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார். என்று பேசினார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கணேசன், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் அர்ஜீனன், மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாவட்ட செயலாளர் சாமுவேல் ஞானதுரை, மாநில பேச்சாளர் சரத்பாலா, துணை மேயர் ஜெனிட்டா, பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் மேகநாதன் ஜெயக்குமார், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளஞைர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், கவுன்சிலர்கள் ராஜதுரை, வைதேகி, முத்துவேல், பட்சிராஜ், சுயம்பு, வட்டச்செயலாளர் கங்காராஜேஷ், செல்வராஜ், முத்துராஜ், நடேசன் டேனியல், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், மதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் சரவணபெருமாள், பாலசுப்பிரமணியன், பகுதி செயலாளர் பொன்ராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, சிபிஎம்யை சேர்ந்த ராஜா, பேச்சிமுத்து, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், மற்றும் மணி, அல்பட், கணேசன், முத்துலட்சுமி, கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

