• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கலைஞர் வழியில் தளபதியார் ஆளும் தமிழகத்தில் பிஜேபிக்கு இடமில்லை, தின்னை பிரச்சாரத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துரையாடல்

policeseithitv by policeseithitv
March 29, 2024
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கலைஞர் வழியில் தளபதியார் ஆளும் தமிழகத்தில் பிஜேபிக்கு இடமில்லை, தின்னை பிரச்சாரத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துரையாடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்தியா கூட்டணி சார்பில்; போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மட்டகடை மற்றும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுடன் அமர்ந்து தின்னை பிரச்சாரம் நடைபெற்றது.

மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களோடு கலந்து தின்னை பிரச்சாரத்தில் அவர்களோடு பேசுகையில்: திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனா காலக்கட்டம் சிறிய பெட்டிகடை முதல் பெரிய தொழிற்சாலை வரை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ துறையை முழுமையாக இயங்க செய்து வெளிமாநிலத்திலிருந்து ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டு பலரது உயிரையும் நாம் காப்பாற்றினோம். அப்போது முதற்கட்டமாக நான்காயிரம் பின்னர் பொங்கல் தொகுப்பு என பல வழங்கப்பட்டுள்ளது.

இப்போது 1 கோடியே 17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை பெருந்தன்மையுடன் முதலமைச்சர் வழங்கி வருகிறார். நான் முதல்வன் படிப்பு வகைக்கு ஆயிரம் உதவித்தொகை இப்படி பல சாதனைகளை செய்துள்ள இந்த ஆட்சியில் ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை இருந்து வருகிறது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் நடைபெறவில்லை. அதே போல் 10 ஆண்டு மோடி ஆட்சியிலும் தமிழகத்திற்கு எந்த நன்மையும்இல்லை. வெள்ள காலத்தின் போது ஓரு ரூபாய் கூட வழங்கவில்லை. ஆனால் தமிழகத்திலிருந்து ஓன்றிய அரசு ஜிஎஸ்டி வசூல், ரயில் பயணம் மூலம் வசூல், விமானம் மூலம் வசூல், இவை எல்லாவற்றிலுமே தமிழக மக்களின் பணத்தில் வருமானம் வருகிறது. அதில் தமிழகத்திற்கு வழங்க கூடிய நிதியை கூட வழங்குவது இல்லை. குஜராத்திற்கு ஒரு நிதி தமிழகத்திற்கு ஒருநிதி, பாரபட்சத்துடன் செயல்படுகிறது, தூத்துக்குடியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதியின் மூலம் கடந்த ஆண்டு 900 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

ஆனால் இந்த மாநகரத்திற்கு வெள்ள பாதிப்பு காலத்தில் எந்த நன்மையும் செய்ய வில்லை. தமிழக முதல்வர் பொறுப்பேற்றதும் மழை காலத்தின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு எங்களுக்கு பல அறிவுரைகளை வழங்கியதின் பேரில் மழை காலங்களில் பக்கிள் கால்வாய்களை மட்டுமே நம்பி இருந்தநிலையில் இப்போது புதிதாக மழைநீர் வெளியேறுவதற்கு 9 கால்வாய் வழித்தடங்களை உருவாக்கி இருக்கிறோம். இருப்பினும் ஓராண்டு பெய்ய வேண்டிய மழை இரண்டு நாட்களில் பெய்த காரணத்தால் ஏற்பட்ட வெள்ளம் 3 தினங்களில் மாநகர பகுதியில் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் எம்.பி உள்பட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முழுமையாக இருந்த பணியாற்றியதின் காரணமாக சராசரிநிலைக்கு வரப்பெற்றது. அதற்கடுத்தகட்டமாக எல்லா பகுதிகளுக்கும் ஆளும்கட்சி எதிர்கட்சி என்ற பாராபட்சம் இல்லாமல் முழுமையாக சாலை கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்லோரும் இந்தியாவில் சமமாக வாழ வேண்டிய இடத்தில் பிஜேபி அதில் பிரிவினையை உருவாக்கி வருகிறது. வட மாவட்டங்களில் இருப்பதை போன்ற நிலைகளை இங்கும் ஏற்படுத்த முயற்சியை மேற்கொள்கின்றன. இது பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் தளபதியார் ஆளும் தமிழகத்தில் இடமில்லை எல்லோரையும் சமமாக மதிக்கும் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. இரண்டு டோல்கேட் பகுதியையும் அப்புறப்படுத்த வேண்டும். மீளவிட்டான் பகுதியில் உள்ள மேம்பாலம் பணி முறையாக நடைபெறாத காரணத்தால் விபத்துக்கள் மூலம் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது அந்த பணிகளை நாம் செய்துள்ளோம் முறையாக 300 கோடி செலவில் திருச்செந்தூர் கோவில் முழுமையாக கட்டமைப்பு பணிகளை மேற்கொண்ட திருப்பணி நடைபெறவுள்ளது. தூத்துக்குடி காரர்கள் பாசக்காரர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் 6 தொகுதிகளிலும் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் கனிமொழி இந்த தொகுதியில் மட்டும் 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள். இந்த முறை அது ஓன்றரை லட்சமாக மாற வேண்டும். ஆறு தொகுதிக்கும் சேர்த்து 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற அறிவிப்போடு தூத்துக்குடி விழாவில் மோடி கனிமொழி பெயரை உச்சரிக்காத நிலையில் சென்ற அவருக்கு இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளில் கனிமொழி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். என்ற அறிவிப்பு வரும் பொழுது மோடி திரும்பி பார்க்கும் நிலை வரும் இந்தியாவில் உள்ள 117 கோடி பேரையும் இந்தியா கூட்டணி இனி வழிநடத்தும் நிலை வரவுள்ளன. தூத்துக்குடி பகுதியில் நான்கு கேட்டுகள் இருந்தும் ஓரு இடத்தில் மட்டுமே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் பல நெருக்கடிகள் ஏற்படுகிறது. புதிதாக விஎம்எஸ் நகர் பகுதியில் ஓரு மேம்பாலம் அமையவுள்ளது. தமிழகத்தில் குழந்தைகள் முதல் 70 வயது முதியவர்கள் வரை எல்லா தரப்பினருமே இந்த ஆட்சியில் பயனடைந்துள்ளனர். புதிய தொழிற்சாலைகள் அமைய இருப்பதால் உள்ளுர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிமுக பாஜக கட்சிகளுக்கு வேட்பாளர்களை தேடி பிடித்து நிறுத்தும் நிலை உருவாகியுள்ளது. தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் நாம் வெற்றி பெறுவது உறுதி இருப்பினும் இரவு பகல் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று பொதுமக்களிடம் கூறினார்.

இதில், மாவட்ட சிறுபாண்மை அணி துணை அமைப்பாளர் அந்தோணி, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், கவுன்சிலர் மரிய கீதா, வட்ட செயலாளர் ரவீந்திரன் மற்றும் ஜோஸ்பர் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை – கோவையில் கனிமொழி கருணாநிதி பேச்சு

Next Post

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பு

Next Post
தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In