தூத்துக்குடி, மார்ச்,25
நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிடுகின்ற சிவசாமி வேலுமணி தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதியிடம் வழங்கினார்.
அப்போது அதிமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜு எம்எல்ஏ, மாநில வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சித. செல்ல பாண்டியன், அதிமுக அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை ஆகியோர் வேட்பாளரோடு உடன் இருந்தனர்.
மாற்று வேட்பாளராக அவரது மனைவி ஆனந்தி பிரபா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இருந்து அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி வழக்கறிஞர் தியாகராஜ் நட்டர்ஜி, முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாநில வழக்கறிஞரணி துணைச் செயலாளர் பிரபு, தெற்கு மாவட்ட ஜெ.பேரவை துணை செயலாளர் திருசிற்றம்பலம், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் டைகர் சிவா, மாநகராட்சி கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, மாவட்ட வழக்கறிஞரணி துணை செயலாளர் சரவண பெருமாள், பிரபு, முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் ஞான்ராஜ், வழக்கறிஞர் ரமேஷ்பாண்டியன் அதிமுக கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ் பி மாரியப்பன், தலைமையில் கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் மகளிர் அணியினர் பெருந்திரளானோர் பங்கேற்றனர் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ், காமராஜர் நாடார் பேரவை மாவட்ட தலைவர் ரவி சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

