தூத்துக்குடி
இந்திய ஜனநாயக கட்சி தென்மாநில செயலாளராகவும் மற்றும் பல்வேறு அமைப்புகளில் பணியாற்றி தூத்துக்குடி மாநகர மக்களில் தேவையற்ற தொழிற்சாலையாக இருந்தால் ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்த போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தன்னம்பிக்கையுடனும் போராட்ட குணத்துடனும் கொரோனா காலக்கட்டத்திலும் மழை வௌ்ள காலத்திலும் தன்னால் இயன்ற உதவிகள் செய்து ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை தேவைகளை உாிமையோடு பாதிக்கப்பட்டவர்களோடு இணைந்து மாவட்ட கலெக்டா் மற்றும் எஸ்.பியிடம் நோில் குறைகளை தொிவித்தும் சிலருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களை நீதிமன்ற சட்டத்தின் மூலம் கிடைக்க செய்தும் மக்கள் நலப் பணிகளை சிறப்பாக செய்து அனைத்து தரப்பினரிடமும் நட்பாக கொண்டு எல்லா வகையிலும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் நலன் கருதி முழுமையாக பணியாற்றி வந்த அருணாதேவி ரமேஷ்பாண்டியன், இந்திய ஜனநாயக கட்சி தென்மாநில செயலாளர் மற்றும் உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜினமா செய்துள்ளார்.
இந்நிலையிலும் கூண்டுக்குள் அடைப்பட்ட பறவையை போல் இல்லாமல் ஓய்வின்றி மக்கள் பணியாற்ற விரும்பும் அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழ்மக்களோடு இணைந்து போட்டியிடவுள்ளார். இதனால் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அச்சத்தில் உள்ளனர்.

