தூத்துக்குடி
தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்குகிறார்.
மார்ச் 26-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகில் உள்ள சிந்நலக்கரையில் நடைபெறும் திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி கருணாநிதியை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கவுள்ளார்..
அதனை முன்னிட்டு, எட்டையாபுரம் அருகில் உள்ள சிந்தலக்கரையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரம் இடத்தை திமுக துணைப் பொதுச் கனிமொழி கருணாநிதி ஆய்வு செய்தார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏக்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில வர்த்தக அணி இணை அமைப்பாளர் உமாிசங்கா், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

